உலகம் சுற்றும் குழந்தை



அமெரிக்காவைச் சேர்ந்த இந்த சிறுமிதான், டிராவல் சம்பந்தமான பத்திரிகைகளில் இப்போது ஹாட் டாக். 5 வயதில் 6 கண்டங்களுக்குப் பறந்து வந்துவிட்டார் செலின். ஒரு வயது முடிவதற்குள்ளேயே, அதாவது பிறந்த 9வது மாதத்திலேயே, தனது முதல் விமானப் பயணத்தை ருசித்த செலின், உலகின் முக்கியமான 14 நாடுகளையும் அதிலுள்ள 42 நகரங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டார்.

வீட்டில் இருந்த நேரத்தை விட, அவர் வெளிநாட்டில் இருந்த நேரம்தான் அதிகம். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட விமானங்களில் பயணித்திருக்கிறார். விமானப் பயணத்தின் போது ஓவியங்கள் வரைவது செலினின் பயணப் பொழுதுபோக்கு. செலினுடன் பெற்றோரும் பயணித்திருக்கின்றனர். வருங்காலத்தில் தங்களது மகள் தனியாகவே உலகைச் சுற்றுவாள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் செலினின் தாய்!

த.சக்திவேல்