Data Corner
இந்தியாவில் 2014 - 2019ம் ஆண்டு வரை யானை தாக்கி 2,398 பேர் உயிரிழந்ததாக மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தகவல்.
உலகில் இருந்த 24 வகை யானை இனங்களில், 22 வகைகள் அழிந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆப்பிரிக்காவில் 4 லட்சம் யானைகளும், ஆசியாவில் 55,000 யானைகளும் இருக்கின்றன.
இந்தியாவில் மொத்தம் 27,312 காட்டு யானைகளில், தமிழகத்தில் மட்டும் 2,761 யானைகள் உள்ளன. ஒரு கூட்டத்தில் 20 முதல் 30 யானைகள் இருந்த நிலையில், இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் வங்கிகளின் மறுமுதலாக்கத்துக்காக (Recapitalization) கிட்டத்தட்ட ரூ.3.5 லட்சம் கோடி அரசு வழங்கியுள்ளது. எல்லாம் நாம் செலுத்தும் வரிப்பணம்தான். அதன் விளைவாக, இந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.7.2 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான ஏழை தம்பதியினர், குறிப்பாக 30 - 35 வயதுகளில் உள்ளவர்கள் சராசரியாக வாரத்தில் மூன்று முறை தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே.
58% பெண்கள் மாதத்தில் 5 நாட்கள் முதல் 12 நாட்களும்; 17% பெண்கள் மாதத்தில் 20 முதல் 25 நாட்களும் உறவு வைத்துக் கொள்வதாக சொல்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாட்கள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள்.
பெருநகரங்களில் 72% பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 28% பெண்கள் மாதத்தில் ஒரு தடவை மட்டுமே என்று சோர்வாக பதிலளித்துள்ளார்கள்.
அன்னம் அரசு
|