நாண ராசி!



புதிய சுவையுடன் புதுப்புது செய்திகளைத் தேடித் தரும் ‘நியூஸ் சாண்ட்விச்’ குங்குமத்தின் ஸ்பெஷல்.
- பிரேமா குரு, சென்னை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; முகம்மது உஸ்மான், மூலக்கடை; கீதா, கோவில்பட்டி.

மீன ராசிக்கார பெண்ணான ரிது வர்மாவுக்கு ‘நாண’ ராசியும் இருப்பதால்தான் செக்கச் சிவந்து காணப்படுகிறார்.
- கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்; கணேசன், மூவரசம்பேட்டை; மனோகர், கோவை; சாந்தாராம், பம்மல்; சரண் சுதாகர், வேளச்சேரி.

இவ்வார தொல்(லைக்) காப்பியத்தில் ஜெகனின் தோட்டாக்கள் வாட்ஸ் அப் வலையில் விழுந்தோரை துளைத்துச் சென்றுள்ளன.
- முரளி, நங்கநல்லூர்; நெல்லை குரலோன், பொட்டல்
புதூர்; ஆத்மநாதன், ஆற்காடு; செம்மொழி, சேலையூர்.

ஹாக்கியில் மட்டுமல்ல; ஒழுக்கத்திலும் பாஸ்கரன் தலைசிறந்தவர். அப்பா வளர்த்த விதமும் பள்ளி, கல்லூரி கற்றுக்கொடுத்த பாடமும்தான் அகராதியில் பாஸ்கரன் என்றாலே ஹாக்கி என்று சொல்லும் அளவுக்கு அவரை உயர்த்தியிருக்கிறது.
- தா.சைமன் தேவா, விநாயகபுரம்; ப.மூர்த்தி, பெங்களூரு; யாழினி பர்வதம், சென்னை; ஆர்.ஜெ.சி, சென்னை; ஆசிகா, வியாசர்பாடி; ஏஞ்சலின், அசோக் நகர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

மாணவ சமுதாயத்தின் போராட்ட குணம் பறிக்கப்பட்ட சூழலை விவரிக்கும் கட்டுரை மிகவும் காட்டம்.
- இலக்சித், மடிப்பாக்கம்; சங்கரன், பழவந்தாங்கல்; மனோகரன், கோவை; அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; ஜெர்லின், ஆலந்தூர்.

டேட்டா கார்னரில் இடம்பெற்ற திருப்பதி கோயில் வசூல், வாய் பிளக்க வைத்தது.
- ராஜம் தம்பையா, மாம்பலம்; வேலு, உள்ளகரம், ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்.

திரைப்படத்துறையின் கார்பன் வெளிப்பாடு உலகத்தை எந்த அளவுக்கு அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்கிறது என்பதை அறிந்து அதிர்வுற்றோம்.
- பிரேமா ராஜ்குமார், குன்னூர்; மியாவ்சின், கே.கே.நகர்; பப்பு, அசோக் நகர்; க.நஞ்சையன், பொள்ளாச்சி; சந்திரமதி, சென்னை.

உருவத்தால் மிரட்டுகிற ‘பெசன்ட்’ ரவி சினிமா தவிர்க்கும் நேரங்களில் ‘பிளசன்ட்’ ரவியாகத் தெரிகிறார்.
- கவுரிநாத், பரங்கிமலை; அண்ணா அன்பழகன், சென்னை; கதிரவன், மதுரை; மனோகர், மேட்டுப்பாளையம்.

ஆட்டோவில் நடமாடும் தற்காலிக வீட்டை வடிவமைத்ததின் மூலம் ஏழைகளுக்கான ஆர்க்கிடெக்ட் கிடைத்துள்ளார்.
- கலிவரதன், கீழ்க்கட்டளை; வேல், உள்ளகரம்; ஆசிகா, வியாசர்பாடி;  கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்.

பத்து வித்தியா சங்கள் பார்த்து பந்தங்களை உருவாக்கச் சொல்லும் மதன் கார்க்கி உண்மையிலேயே வித்தியாசமானவர்தான்.
- நிலவழகு, நீலாங்கரை; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; சரவணன், சென்னை;  பிரேமா, சென்னை.  

ரீடர்ஸ் வாய்ஸ்