இனிமைக் காப்பியம்!



தோட்டா ஜெகனின் ‘தொல்(லை) காப்பியம்’ கலகலப்பான - இதயத்தை ஈர்க்கும் இனிமையின் எல்லைக் காப்பியம்.
- கொ.சி.சேகர், பெங்களூரு; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆர்.ஜெ.சி, சென்னை; டி.எஸ்.தேவா, கதிர்வேடு.

‘அரிசி ராஜா’வைப் பிடித்துப் பாதுகாப்பாக வனத்துக்குள் விட நடந்த நிகழ்ச்சிகள் திரில்லர் பட ரேஞ்சுக்கு மனதைப் படபடக்க வைத்தது.
- க.நஞ்சையன், பொள்ளாச்சி; ப.மூர்த்தி, பெங்களூரு; பிரேமா குரு, சென்னை; கருணா
கரன், போரூர்; இலக்சித், மடிப்பாக்கம்; கீதா, கோவில்பட்டி; கதிரவன், மதுரை; மனோகரன், மேட்டுப்பாளையம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

நெல்லைப் பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி, நூறைத் தொட இருக்கும் மருத்துவ மாமேதை ரமாபாய் குறித்து ‘குங்குமம்’ வாயிலாகத்தான் அறிய முடிந்தது.
- இராம.கண்ணன், திருநெல்வேலி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ரா.புனிதவதி, பொள்ளாச்சி; பிரேமா குரு, சென்னை; எம்.எஸ்.இப்ராகிம், சென்னை.

நாவல் படிப்பதைப் போன்ற உற்சாக அனுபவத்தைத் தரும் நீல நிற நகரம் ஜோத்பூரைப் பார்த்து வரவேண்டுமென்ற ஆவலை உண்டுபண்ணி
விட்டீர்கள்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; இப்ராகிம், மடிப்பாக்கம்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

‘ஐயாயிரம் + ஐநூறு = ஏழரை’  என்ற கணிதத் தலைப்பில் ஒரு வித்தியாசமான காமெடி கதையைத் தந்து அசத்திவிட்டார் பாமா கோபாலன்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; இலக்சித், மடிப்பாக்கம்.

அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் ‘கெம்ப் நகைகள்’ பற்றிய விளக்கம் மற்றும் ஃபேன்சி நகைகளைப் பாதுகாக்க சொல்லிய ஐடியாவும் சூப்பர்.
- மியாவ்சின், கே.கே.நகர்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்.

ஜி.எஸ்.டி. முறையால் மறைபவர்கள் குறித்து அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை என்ற சோகமான உண்மையைப் பதிவு செய்த ‘3-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி’ கட்டுரை கனமானது.
- முரளி, நங்கநல்லூர்; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்; நிலவழகு, நீலாங்கரை; செம்மொழி, சேலையூர்; த.சத்திய
நாராயணன், அயன்புரம்.

தில்லியில் ‘ஆக்சிஜன் பார்’ வந்துள்ளது சிரிப்பை வரவழைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாக்கெட்களிலும் பாட்டில்களிலும் மினரல் வாட்டர் வந்தபோது இதே மாதிரி சிரித்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.
- பிரேமா பாபு, சென்னை; கவுரிநாத், பரங்கிமலை; ஆசிகா, வியாசர்பாடி, கதிர், மதுரை.

ரீடர்ஸ் வாய்ஸ்