சுழலும் செல்ஃபி கேமரா!



புதிதாக  ஏதாவது செய்தால் மட்டும்தான் சந்தையைப் பிடிக்க முடியும், வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என்பதற்கு உதாரணமாக
ஸ்மார்ட்போனைச் சொல்லலாம். ஒரு சோறு பதம் ‘ஹுவாய்’ நிறுவனம் அதிரடியாகச் செய்திருக்கும் காரியம்! ஆம்; அதன் அடுத்த மாடல் போனில் செல்ஃபி கேமராவை சுழலும் விதத்தில் வடிவமைக்கப் போகிறது.

‘சாம்சங்’, ‘ஓப்போ’ போன்ற நிறுவனங்கள் சுழலும் செல்ஃபி கேமராவைப்பற்றி இரண்டு வருடங்களாகச் சொல்லி வருகின்றன. ஆனால், அதைச் செயல்படுத்தப்போவது ‘ஹுவாய்’தான். பாப்-அப் முறையில் இயங்கும் செல்ஃபி கேமரா 180 டிகிரி வரை சுழலும். அதனால் செல்ஃபி கேமராவுக்குத் தகுந்த மாதிரி நீங்கள் போஸ் கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள் எப்படி போஸ் கொடுத்தாலும் அதை அழகாக கிளிக் செய்துவிடும்!

த.சக்திவேல்