ரூ.222 கோடிக்கு ஏலம் போன வாட்ச்!



உலகின் விலைஉயர்ந்த வாட்சுகளை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ‘பாடக் பிலிப்’. சுவிட்சர்லாந்தில் 177 வருடங்களாக இயங்கி வரும் இந்நிறுவனத்தின் வாட்ச்சுகளை அணிந்தவர்களின் பட்டியலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நெல்சன் மண்டேலா, எலிசபெத் மகாராணி போன்ற பிரபலங்களும் இடம்பெறுகின்றனர்.

இதுவரை நடந்த வாட்ச் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட முதல் பத்து வாட்ச்சுகளில் ஏழு ‘பாடக் பிலிப்’பிற்குச் சொந்தம்!சமீபத்தில் ஜெனீவாவில் நடந்த ஏலத்தில் ‘பாடக் பிலிப்’பின் ‘Grandmaster Chime’ என்ற மாடல் ரூ.222 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது. இதன் மூலம் உலகின் அதிக விலையுடைய வாட்ச் என்ற கவுரவத்தையும் தன்வசமாக்கிவிட்டது ‘பாடக் பிலிப்’.

இந்த மாடலில் ஒரே ஒரு வாட்ச்தான் உள்ளது. நுணுக்கமான வேலைப்பாடு, விலையுயர்ந்த உலோகங்கள், டிசைன், தொழில்நுட்பம் மற்றும் பிராண்ட் வேல்யூவுக்காகத்தான் இந்த விலை. இதை ஏலம் எடுத்தவர் பெயரை ரகசியம் காக்கின்றனர். ஏலத்தொகை தசைச்சிதைவு நோய்க்கான ஆராய்ச்சிக்குக் கொடுக்கப்படவிருக்கிறது!

சக்தி