மின்சாரத்தை அள்ளி வழங்கும் செயற்கை சூரியன்



உலகில் எந்தப் பொருள் அறிமுகமானாலும் அடுத்த நிமிடமே அதை சீனா நகல் எடுத்துவிடும்! இதை குடிசைத் தொழில் போல் சீனர்கள் செய்து வருகின்றனர்.பொருட்களை மட்டுமல்ல இயற்கையையும் நகல் எடுப்பதில் சீனர்கள் கில்லாடிகள் என்பதற்கு உதாரணம்தான் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் உண்டாக்கிய செயற்கை நிலவு. விரைவில் இந்த செயற்கை நிலவு சீனாவில் ஒளிவீசப் போகிறது.

இதன் அடுத்தகட்டமாக இப்போது சூரியனையும் செயற்கையாக வடிவமைத்துள்ளனர்!சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸ். அதனால் சூரியனில் அழுத்தம் அதிகமாக இருக்கும். அணு இணைவு இயல்பாக நடக்கும். இந்த அழுத்தத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. இது இயற்கைக்கே உரிய தனித்துவம். ஆனால், 15 மில்லியன் டிகிரி செல்சியஸைவிட அதிக வெப்பத்தை மனிதனால் உருவாக்கிட முடியும். சீனா இதைத்தான் செய்திருக்கிறது.

மிக அதிக வெப்பத்தை உருவாக்கி அதன் மூலம் அணு இணைவை நடத்தி செயற்கை சூரியனை படைத்திருக்கிறது சீனா.  இதன் வெப்பநிலை 100 மில்லியன் டிகிரி செல்சியஸ்! அதாவது ஆறு சூரியனின் வெப்பம்!செயற்கை சூரியனின் செயல்பாடுகள் குறித்து சோதனை செய்துவருகின்றனர்.

இன்னொரு பக்கம் சூழலியல் ஆர்வலர்கள் இந்த முயற்சிக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். இவ்வளவு வெப்பத்தை வெளியேற்றும் சோதனையால் அதிகளவு கதிர்வீச்சு பரவும் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

ஆனால், இதில் கதிர்வீச்சு அபாயமில்லை என்கின்றனர் சீன விஞ்ஞானிகள். 2025க்குள் செயற்கைச் சூரியன் வந்துவிடும். சீனாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையை இது பூர்த்தி செய்வதோடு, மற்ற நாடுகளுக்கும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யப் போகிறது!

த.சக்திவேல்