அதிர்ஷ்டக்காரர்!



ரீடர்ஸ் வாய்ஸ்

‘எதுக்கெடுத்தாலும் ஏன் முந்திரிக்கொட்டையாட்டும் முந்திக்கிறே’ என்று கிண்டல் செய்வது போய், உண்மையிலேயே முந்திரிக்கொட்டையாய்
நடித்த அன்புக்கரசு அதிர்ஷ்டக்காரர்தான்.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; க.நஞ்சையன், பொள்ளாச்சி; என்.அத்விக், அசோக் நகர்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; எஸ்.சண்முகம், திருவண்ணாமலை; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிற ஒரு புரட்சி போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கும் கிரேட்டா தன்பர்க் - தி கிரேட்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; பப்பு, அசோக்நகர்; நிலவழகு, நீலாங்கரை; செம்மொழி, சேலையூர்; ஜெர்லின், ஆலந்தூர்; கவுரிநாத், பரங்கிமலை; கீதா, கோவில்பட்டி; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்.

‘அமித்ஷாவின் கதை’ அரசியல் மசாலா கலந்த த்ரில்லான இந்திப் படம் பார்த்தது போல இருந்தது. எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் அவர் சிம்மசொப்பனம்தான்.
- இலக்சித், மடிப்பாக்கம்; பிரேமா பாபு,சென்னை; மனோகர், கோவை; கருணாகரன், போரூர்; ஆர்.ஜெ.சி, சென்னை; அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; மியாவ்சின், கே.கே.நகர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; எஸ்.அன்பு
முத்து, வடுவூர்; ப.மூர்த்தி, பெங்களூரு.

99 வயது வரை நோய் இருப்பதே தெரியாமல் வாழ்ந்த ரோஸ்மேரி குறித்த தகவல்கள் பிரமிப்பைத் தந்தன.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; ரவிக்குமார்,பொள்ளாச்சி.

பழைய ஜீன்ஸ் பேண்ட்டில் ஏழை மாணவர்களுக்கு செருப்பு உட்பட 25க்கும் மேலான பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கும் அதுல், நிகில், மிருணாளினி ஆகிய மூவரின் சாதனைகள் பாராட்டுக்குரியது. இவர்கள்தான் இந்தியாவை வல்லரசாக்கும் முன்னோடிகள்.
- மனோகர், மேட்டுப்பாளையம்; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; மகேஸ்வரி, பொள்ளாச்சி.

தயாரிப்பாளர்களைத் ‘ததிகிடதோம்’ போட வைக்கிற நடிகர், நடிகைகள் பற்றிய கட்டுரை பிலிம் சிட்டியின் அட்ராசிட்டிகளை அம்பலமாக்கியுள்ளது.
- ஜெர்லின், ஆலந்தூர்; நரசிம்மராஜ், மதுரை; மீ.அழகுமங்கை, அடையார்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; சாய்கவின், பொள்ளாச்சி; கைவல்லியம், மானகிரி.

சரண்ராஜின் இடைவிடாத முயற்சியால் சினிமா வாய்ப்புகள் சரண்டர் ஆன கதை ரொம்பவே சுவாரஸ்யம்.
- கவுரிநாத், பரங்கிமலை; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஸ்பேஸ் ஸ்டாராக ஒளிர்வதற்கு இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து தயார்நிலையில் உள்ள உதயகீர்த்திகா பெண் இனத்துக்கே பெருமை சேர்த்திருக்கிறார்.
- கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; கீதா, கோவில்பட்டி.