ரெண்டு!தூரிகை வேண்டாம் விரல்கள் போதும்!

சமூக வலைத்தள பக்கங்களில் கிரியேட்டிவ் ஐடியாக்களுக்கும் அதன் செய்முறையுடன் கூடிய காணொளிகளுக்கும் பஞ்சமே இல்லை. அங்கே அவ்வளவு கொட்டிக்கிடக்கிறது. அதில் ஒரு சாம்பிள் இது. தூரிகை இல்லாமல் கை விரல்களால் ஓவியம் வரைய கற்றுக்கொடுக்கிறது ஒரு வீடியோ. ஃபேஸ்புக்கின் ‘Bright Side’ பக்கத்தில் ‘Cute Paintings With Your Fingers to Have Fun’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள அந்த வீடியோ ஹார்ட்டின்களை அள்ளுகிறது.

புளூடூத் இயர்போன்!

இசைப் பிரியர்களுக்காக புளூடூத் இயர்போனை அறிமுகப்படுத்தியுள்ளது ‘ஷியோமி’ நிறுவனம். சட்டை காலர் போல இருக்கும் இதன் ஒயரை கழுத்தில் மாட்டிக்கொள்ளலாம். ஸ்மார்ட்போன், டி.வி உட்பட அனைத்து ஆடியோ, வீடியோ டிவைஸ்களுடனும் இதை இணைத்துக்கொள்ள முடியும். ஆனால், இணைக்கப்பட வேண்டிய டிவைஸ்களில் புளூடூத் இருப்பது அவசியம். ஒரு முறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 8 மணி நேரம் வரை இயங்குகிறது. விலை ரூ. 1,599.