உலகமே தேடும் நிதி பெண் இவர்தான்!
சமீபத்தில் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகளின் பட்டியலை வெளியிட்டபோது, அதில் இடம்பிடித்த ஒரு பெண்ணை இணைய உலகமே வலைவீசித் தேடியது. காரணம், அதற்கு முன் அவரைப் பற்றிய விவரங்களோ செய்திகளோ அவ்வளவாக ஊடகங்களில் அடிபடவில்லை.
 அமைதியாக தனது செயல்களில் கவனம் செலுத்தி வளர்ச்சிப் பாதையில் ஏறிக்கொண்டிருக்கும் அந்தப் பெண்மணி வேறு யாருமல்ல... மைக்ரோசாஃப்ட்டின் சிஎஃப்ஓ எமி ஹுட்தான்! ஐந்து ஆண்டுகளுக்கு முன் ‘மைக்ரோசாஃப்ட்’டின் நிதித்துறையைத் தனது கையில் எடுத்த எமி, பங்குச்சந்தையில் ‘ஆப்பிள்’ நிறுவனத்தையே பின்னுக்குத் தள்ளிவிட்டார்.
எமியின் நிர்வாகம் மற்றும் பொருளாதார அறிவால் சுமார் 300% அளவுக்கு மைக்ரோசாஃப்ட்டின் பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது. நிதித்துறையில் ஆண்களின் கையே ஓங்கி இருக்கும் காலத்தில் எமி ஹுட் போன்றவர்கள் ஆச்சர்யம். இத்தனைக்கும் அவருக்கு வயது 47தான்!
த.சக்திவேல்
|