சிரிங்க பாஸ்
 ‘‘குழிப்பணியாரம் கேட்டாரே மன்னர்... எங்கே அவரைக் காணோம்?’’ ‘‘பதுங்கு குழியில் இருக்கார்!’’
“அவர் போலி டாக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்ச?” “பின்னே என்ன? கன்சல்டிங் ஃபீஸ்ல ஆடித்தள்ளுபடி 50% னு போட்டிருக்காரே!”
“கல்யாணப் பத்திரிகை கொடுக்கும்போதே நோட்டில் ஏன் பெயர் எழுதிக்கறீங்க?” “இது மொய் நோட். அப்புறமா மொய் கொடுத்தீங்களான்னு செக் பண்ணி டிக் செய்துப்போம்!”
‘‘தியேட்டர் வாசலில் எதுக்கு இவ்ளோ குப்பை வண்டிங்க நிக்குது?’’ ‘‘‘ஒரு குப்பைக்கதை’ன்னு பேனர் வெச்சிருக்காங்களே!’’
‘‘ஊசி போடும்போது நர்ஸ் ஏன் சிரிக்கறாங்க?’’ ‘‘கையில் ‘சிரி’ஞ்சு இருக்கே!’’
‘‘‘மீ டூ’னு படம் எடுக்கறாங்களே... எனக்கு ஒரு டவுட்டு...’’ ‘‘என்ன?’’ ‘‘‘மீ ஒன்’ படமே இன்னும் வரலையே?!’’
‘‘பேய்க்கும் பிசாசுக்கும் என்ன வித்தியாசம்?’’ ‘‘ஓர் எழுத்துதான்!’’
‘‘ரெய்டுக்கு வந்த அதிகாரி போலின்னு எதை வெச்சு சொல்ற?’’ ‘‘ஜனவரி ஸ்டேட்மெண்ட்... ஃபிப்ரவரி ஸ்டேட்மெண்ட்… மார்ச்சுவரி ஸ்டேட்மெண்டுன்னு கேட்கறாரே!’’
‘‘அங்கே என்ன டோக்கன் கொடுக்கறாங்க?’’ ‘‘மொய் வெச்சவங்களுக்கு மட்டும் சாப்பாட்டு டோக்கனாம்!’’
வேமாஜி
|