சிரிங்க பாஸ்‘‘துப்பறிவாளர் ஏன் பீச்சில் போய் நிக்கறார்?’’
‘‘அவர் ‘வேவ்’ பார்க்கறாராம்!’’

‘‘ஹோட்டல்ல நம்ம
ரூட் தல என்ன
சாப்பிடறாரு?’’
‘‘பீட்ரூட் அல்வா!’’

“அந்தக் கோயில்ல நிறையப் புறாக்கள் உட்கார்ந்திருக்கே...”
“பின்னே... அது புராதனக்கோயில் ஆச்சே!”

வங்கி ஊழியர்:
‘‘என்னய்யா
ஸ்கூல் நோட்டை
நீட்டறே?’’
வாடிக்கை
யாளர்:
‘‘நோட்டு கிழிஞ்சுடுச்சு... வேற நோட்டு
கொடுங்க!’’

“என்னடீ... இப்படி ஒண்ணு மேல ஒண்ணா இத்தனை புடவை கட்டியிருக்க?’’
“கட்டின புடவையோட என் லவ்வர் வரச்
சொன்னார்!’’

“நாய் ஜாக்கிரதை போர்டில் என்ன அடிச்சு எழுதற?”
“பேய் ஜாக்கிரதைன்னு! உள்ளே என் மாமியார்
மட்டும்தான்
இருக்காங்க...”

‘‘‘அப்பர்’ பெர்த்ல படுத்திருக்கறவரு பேரு என்னம்மா?’’
‘‘திருநாவுக்கரசர் சார்!’’

‘‘நான் சொல்வதெல்லாம் உண்மை.
உண்மையைத்
தவிர வேறு
ஏதுமில்லை...’’
‘‘சரி லாயர் சார்!’’

‘‘என்ன இது... நல்ல புடவைங்களை லாண்டரிக்கு எடுத்துக்கிட்டுப் போற?’’
‘‘நாளைக்கு உங்க அருமைத் தங்கை வராளே!’’