அஞ்சு பன்ச்-சமுத்திரக் கனி



2020 வரை கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. ஆனால், நண்பர்களுக்கு என்றால் இரவு பகலாக நடித்துக் கொடுத்து விடுவார்.

அரசியலில் ஆர்வம் இல்லை. ஆனால், சமூகப் பிரச்னைகளில் குரல் கொடுக்க முதல் ஆளாக நிற்பார். காமராசர்தான் பிடித்த தலைவர்.

உதவி இயக்குநர்களின் வேடந்தாங்கல். அவர்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் முன்நின்று உதவுவார். அதனால் ‘கனி அண்ணா’ என்றே அன்புடன் அழைக்கப்படுகிறார்.

மலையாளப் படவுலகோடு தனிப்பட்ட தொடர்பும், பழக்கமும் உண்டு. குறிப்பாக மோகன்லாலின் படங்களில் அடிக்கடி இடம் பெறுவார்.

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எங்கிருந்தாலும் குருவான டைரக்டர் பாலச்சந்தரைப் பார்த்து காலில் விழுந்து வணங்குவார். இப்பொழுதெல்லாம் அவர் அலுவலகம் போய் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வருகிறார்.

நன்மதி