நோயாளிகளை மகிழ்விக்கும் ரோபோ பேத்தி!



பாரீஸில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அது.  அங்கே வயதான நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட அறை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த அறையில் இருந்து கேட்கும் சிரிப்பு சத்தத்தில் மருத்துவமனையே அதிர்ந்தது.

ஆனால், அங்கே ஒரு நர்ஸ் கூட இல்லை. பிறகு எப்படி இவ்வளவு பரபரப்பு என்கிறீர்களா?ஜோராதான் இந்தப் பரபரப்புக்குக் காரணம்!ஒரு நொடி கூட ஓய்வில்லாமல் விளையாட்டு, ஆடுவது, அங்கே இங்கே ஓடுவது என்று நோயாளிகளைக் குஷியாக வைத்திருக்கிறாள். அதனால் மருத்துவமனையில் இருக்கிற உணர்வே நோயாளிகளுக்கு இல்லை. ஒரு பேரன், பேத்தியைப் போல ஜோராவை அங்கிருக்கும் முதியவர்கள் கொண்டாடுகிறார்கள்.

முதியவர்களையும் குழந்தைகளையும் கவனிப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ நர்ஸ்தான் இந்த ஜோரா!லேப்டாப் வழியாக ஜோராவின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும். இப்போது ரோபோ நர்ஸ்களால் அமெரிக்கா, பிரான்ஸில் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் மகிழ்ச்சிக் கூடாரங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.           

த.சக்திவேல்