ஞாயிறு போற்றுதும்!



தெலுங்கில் நானியின் த்ரில்லர் படம் தவிர தமிழில் தனுஷ், மிஷ்கின் என மின்னுகிறார் அதிதிராவ் ஹைதரி. ஹிர்த்திக் ரோஷனின் ரசிகையான அதிதி, பாலிவுட் இயக்குநர் ஃபாரா கானின் குட்புக்கிலும் பளபளக்கிறார்.
சமீபத்தில் ஒரு அழகான சண்டேயில் ஹிர்த்திக்குடனும் அவரது லேட்டஸ்ட் ‘சூப்பர் 30’ டீமுடனும் சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். கூடவே அன்றே அந்த மெகா டீமுடன் லன்ச், டின்னர் என அசத்தி ஞாயிறை கொண்டாட்டமாக்கி இருக்கிறார்!