கொஞ்ச சிரிங்க பாஸ்!
‘‘அந்தக்கடைல ஏன் இவ்ளோ க்யூ நிக்குது?’’ ‘‘குடம் வாங்கினா அதுல தண்ணீர் நிரப்பிக் கொடுப்பாங்களாம்!’’
‘‘உயில் எழுத வக்கீல் அர்ஜுன் கிட்ட ஏன் போனீங்க?’’ ‘‘பின்னே... அவருக்குதானே வில் பவர் அதிகம்!’’
“நர்ஸ் தாரா, ஒன்பது மணிக்குதான் வருவாங்க...’’ “அப்ப அவங்க டான் நயன்தாரான்னு சொல்லுங்க!”
‘‘மருமக எங்க போயிருக்கா?’’ ‘‘‘ராட்சஸி’ பார்க்கப் போயிருக்கா...’’ ‘‘வீட்டிலயே உங்களைப் பார்க்கலாமே!’’
‘‘உங்களைப் பார்க்க யாரோ நாலு தாத்தாக்கள் வந்தாங்களே... அவங்க யாரு பாட்டி..?’’ ‘‘என் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ்டா!’’
‘‘இது ஆணா பெண்ணா?” “இவன் என் பிள்ளைங்க!” “நீங்க அவனுக்கு அப்பாவா அம்மாவா?”
‘‘ரயில் ஓட்டுபவர் எதுக்கு கீ போர்ட் எடுத்துக்கிட்டுப் போறார்?’’ ‘‘‘ஹாரன்’ வேலை செய்யலையாம்!’’
‘‘போட்டில ஜெயிச்சதுக்கு கோப்பை கிடைச்சுதுனு சொன்னியே... வெள்ளியா தங்கமா..? எங்க காட்டு..?’’ ‘‘பீங்கான்ல கொடுத்தாங்க. அதுலதான் உங்களுக்கு காப்பி கொடுத்திருக்கேன்!’’
“அந்த வக்கீல் கிட்ட விவாகரத்துக்கு யாரும் போக மாட்டேன்றாங்களே..?” “ஏன்னா... கல்யாண ராமன்னு பெயர் வெச்சிருக்காரே!”
- வேமாஜி
|