டர்ஸ் வாய்ஸ் - நியாயமா?
 பாடப்புத்தகங்கள் இல்லையென்றால் பள்ளிகள் திறந்து ஒரு பயனும் இல்லை என்பதை அருமையாகப் புரிய வைத்துவிட்டீர்கள். - டி.முருகேசன், கங்களாஞ்சேரி; மனோகர், மேட்டுப்பாளையம்; கருணாகரன், போரூர்; அ.யாழினி பர்வதம், சென்னை; அமிர் பத்ரா, சென்னை; கைவல்லியம், மானகிரி.
17வது நாடாளுமன்றத்திலும் பெண் எம்.பிக்களின் விழுக்காடு 17-ஐத் தொடவில்லை என்பது பெரும் வியப்பு கொள்ள வைத்த செய்தி. - ஆத்மநாதன், ஆற்காடு; கருணாகரன், போரூர்; கலிவரதன், கீழ்க்கட்டளை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; இலக்சித், மடிப்பாக்கம்; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; மீ.அழகுமங்கை, அடையாறு.
சமீபத்தில் சில தோல்விகளைச் சந்தித்த விஜய் ஆண்டனிக்கு இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறார். இனி லூயில் காட்டில் அடைமழை தான். - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; சந்திரமதி, சென்னை; பிரேமா பாபு, சென்னை; ஆர்.ஜெ.சி, சென்னை; சம்யுக்தா சுதாகர், வேளச்சேரி; மாளவிகா ரமேஷ், மாம்பலம்.
வவ்வாலைப் போல தலைகீழாக நின்றாவது ‘நிபா’ வைரஸை விரட்டுவது அரசின் கடமை. சரியான நேரத்தில் மக்களுக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி. - சந்திரமதி, சென்னை; ப.மூர்த்தி, பெங்களூரு; பிரேமா பாபு, சென்னை; ஜெயசந்திர பாபு, மடிப்பாக்கம்.
‘இந்தியாவில் மங்காத்தா ஆடும் மெடிக்கல் மாஃபியாக்கள்’ - அதிர்வைத் தரும் கட்டுரை. மருத்துவத்துறையில் நிலவும் அத்தனை ஊழல்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். - எம்.எஸ்.இப்ராகிம், சென்னை; கருணாகரன், போரூர், க.நஞ்சையன், பொள்ளாச்சி; அ. யாழினி பர்வதம், சென்னை.
கோடை வெயில் தணிந்துவிட்டது என்று பார்த்தால் ‘புதுசு கண்ணா புதுசு’ எனறு 11 பக்கங்களில் பாலிவுட் மற்றும் மல்லுவுட்டில் கலக்கும் புசுசுகளின் படங்களைப் போட்டு சூட்டைக் கிளப்பிவிட்டது நியாயமா? - ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; மியாவ்சின், கே.கே.நகர்; பிரேமா குரு, சென்னை.
குழந்தைகளைப் பாதிக்கும் காற்று மாசுபாடு பற்றி படித்தது மனதைக் கவலைப்படுத்துகிறது. - எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; இராம.கண்ணன், திருநெல்வேலி; கருணாகரன், போரூர்.
டாப்ஸியின் 5 பன்ச்சும் அவர் சிறப்பான, நேர்மையான நடிகை என்பதை உணர்த்திவிட்டது. - டி.எஸ். தேவா, கதிர்வேடு; மனோகர், மேட்டுப்பாளையம், பிரேமா, சென்னை; சரவணன், மடிப்பாக்கம்.
|