அஞ்சு பன்ச்-பா.இரஞ்சித்
 *உதவி இயக்குநர்களை புத்தகங்கள் படிக்க வற்புறுத்துவார். அடிக்கடி புதுப்பித்த புத்தகப் பட்டியலோடு புத்தகங்களும் கொடுப்பார். *கிரிக்கெட் பிடிக்கும். மாலை நேரத்தில் தவறாது கிரிக்கெட் விளையாடுவார். அது பற்றிய முழு வரலாறும் தெரியும்.
*அலுவலகத்தில் இனிமையாகப் பாடுவார். ஆடவும் செய்வார். ஓவியம் வரைவார். உணவுப் பிரியர். குறைவாக உண்பார். ருசி முக்கியம்.
*தூய்மையான நல்லுடைகள் அணிய ஆர்வம். உடன் இருப்பவர்களையும் அவ்விதம் இருக்கத் தூண்டுவார்.
*பிடித்த எழுத்தாளர் பாவ்லோ கொய்லோ. THE ALCHEMISTதான் (ரஸவாதி) மிகவும் பிடித்த புத்தகம். இந்தப் புத்தகம் பற்றிய சிறு உரையாடல் அவ்வப்போது அவர் பேச்சில் இடம் பெற்று விடும்.
நன்மதி
|