கங்கணா வெடிகுண்டு!



சர்ச்சைகளும் விவாதங்களும் நடிகை கங்கணா ரனாவத்துடன் ஒட்டிப் பிறந்த இரட்டை வாழைகள்.ஹிருத்திக் ரோஷன் தொடங்கி பல பாலிவுட் நட்சத்திரங்களை பகிரங்கமாக கடந்த காலத்தில் விளாசியிருக்கிறார். பாலியல் ரீதியாக தன்னைச் சுரண்டியவர்களின் பெயர்களை எல்லாம் வெளியிட்டிருக்கிறார்.எதற்கும் யாரும் இதுவரை பதில் சொல்லவில்லை. குற்றம் சுமத்துவதை இவரும் நிறுத்தவில்லை.

இப்போது அவை அனைத்தும் ஆவணமாகப் போகிறது!யெஸ். தனது வாழ்க்கை வரலாற்றை, தானே படமாக்கப் போகிறார்! தன் கேரக்டரில், தானே நடிக்கவும் போகிறார். இயக்கம்? அவரேதான்!திரைக்கதையை மட்டும் ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார்.
 செய்தி கசிந்ததுமே பாலிவுட் பிரபலங்கள் மிரண்டு விட்டார்கள். யார் யாரை படத்தில் தாக்கப் போகிறார் என்று தெரியவில்லை!ஆக, அணுகுண்டு தயாராகப் போகிறது!                  

காம்ஸ் பாப்பா