நல்ல கணவன்... நல்ல மனைவி!



நடிகை ஸ்மிதா பாட்டீல் நினைவில் இருக்கிறதா..?
இந்தி சினிமாவின் குறிப்பிடத்தகுந்த திறமைசாலிகளில் ஒருவர். அப்படிப்பட்டவரின் மகன் பிரதீக் பாபர், இப்போது லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார்.ம்ஹும். நடிப்புக்காகவோ அல்லது கைவசம் ஏராளமான படங்களை வைத்திருப்பதற்காகவோ அல்ல!

மாறாக, இங்கே பிரசுரமாகி இருக்கும் புகைப்படத்துக்காக!காதலர் தினம் அன்று தன் மனைவி சன்யா சாகருடன் இப்படியொரு புகைப்படத்தை எடுத்து அதை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்!இப்படி புகைப்படம் எடுப்பது சரி... இல்லை தவறு என வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.என்னவோ போடா மாதவா... ஒன்றும் சொல்வதற்கில்லை!

காம்ஸ் பாப்பா