சிங்கிள்டா கெத்துடா!
*‘இந்த லவ் எல்லாம் வேஸ்ட் மச்சி, சிங்கிள்தான் கெத்து’ என தன் அறையில் கமிட் ஆன நண்பனை மைண்ட் வாஷ் செய்வது முதல் இந்த சிங்கிள் பசங்க மற்றும் பெண்களின் அலப்பறை இருக்கிறதே... ஐயகோ!சரி; காதலில் விழாத சிங்கிள்களை எப்படிக் கண்டறிவது?

*ஸ்டேட்டஸில் எப்போதும் ஜாலி பாடல் அல்லது வடிவேலு காமெடி கிளிப்கள் வைத்து தெறிக்க விடுவார்கள்

*பிளே டைம் வித் டாமி என செல்லப்பிராணியுடன் பில்டப் கொடுப்பார்கள்.

*தாய்ப்பாசத்தில் ‘என்கவுண்டர்’ ஏகாம்பரத்தையே மிஞ்சிவிடும் அளவுக்கு தவறாமல் ‘மதர்ஸ் டே வித் மம்மி’ போஸ்ட் இடம்பெறும்.

*‘Always Alone Traveller’ என ராயல் என்ஃபீல்டில் பேக் பேக் சகிதமாக போஸ் கொடுத்து செல்ஃபி போடுவார்கள்!

*பிரியாணி லவ்வர் என தன்னைத்தானே அடையாளப்படுத்திக்கொண்டு பச்சத் தண்ணீர் குடித்தாலும் அதை பக்குவமாக கிளிக்கி ‘foodie’ போஸ்ட் போடுவார்கள்.

*‘வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்’ என PUBG வெறியராக மாறியிருப்பார்கள்.

*எப்போதும் சிங்கிள்ஸ் குறித்த கெத்தான மீம்ஸ்களை இவர்களின் டைம்லைன்களில் பார்க்கலாம்.

*சரியாக காதலன் அல்லது காதலியுடன் உருகிக்கொண்டிருக்கும் நண்பர்களைக் குறிவைத்து பிளே பாய் (அ) கேர்ள் டாக் செய்து கிண்டலடித்து போட்டுக் கொடுப்பதை முழுநேரமாகச் செய்வார்கள்.

*எல்லாவற்றிற்கும் மேல் ‘பிப்ரவரி 14’ அன்று வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டார்கள்!

*ஆண் என்றால் பெண்களை; பெண் என்றால் ஆண்களைக் கண்டாலே பிடிக்காது என்பது போல் சீன் போடுவார்கள்.

*இப்படியான சிம்பல்களில் ஏதேனும் ஆறு இருந்தாலே அவர்கள் நிச்சயம் சிங்கிள்கள்தான். யோசிக்காமல் அப்ளிகேஷன்களைப் போடலாம்!இந்த அறிகுறிகளைக் கொண்டு பெற்றோர்களும் தன் மகன் அல்லது மகள் காதலில் விழவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். என்ன... சமீபத்தில் பிரேக் அப் ஆன பக்கிகளின் நிலையும் இதேதான்! ஸோ, ஜாக்கிரதை!  

ஷாலினி நியூட்டன்