நெற்றியில் பத்து!ரீடர்ஸ் வாய்ஸ்

‘விஜய்யை உலுக்கிய 10 நாட்கள்’ என்று நீங்கள் கொடுத்த பில்டப்பில் கிறுகிறுப்பாகி நெற்றியில் ‘பத்து’ போட வேண்டியதாகிவிட்டது! அஜீத்துக்கும் விஜய்க்கும் நடக்கிற ‘நெக் டூ நெக்’ ரேஸ் ஹார்ட் பீட்டை ஜெட் வேகத்தில் முடுக்கிவிட்டது.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்; இலக்சித், மடிப்பாக்கம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; நடராஜன், திருமுல்லைவாயல்; ஜெயசந்திரபாபு, சென்னை; மலர்விழி, சென்னை; செம்மொழி, சேலையூர்.

‘ஸ்ரீதேவியின் மகள்’ கட்டுரையைக் கண்டேன். மீண்டும் ஒரு மயில் வரப்போகிறார் என்பதை நினைத்ததும் புல்லரித்தது.- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.‘பேட்ட’ புகழ் கார்த்திக் சுப்புராஜின் மனைவி சத்யாவின் பேட்டி சூப்பர்யா!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆர்.ஜெ.சி, சென்னை; ஜெயசந்திரபாபு, சென்னை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கருணாகரன், போரூர்.

பார்ட் டைம் விவசாயி என்பதால்தான் ‘விஸ்வாசம்’ படத்தில் வெற்றியின் ஒளிப்பதிவு பசுமையாக இருந்ததோ!- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; அ.யாழினி பர்வதம், சென்னை; கைவல்லியம், மானகிரி; சந்திரமதி, சென்னை; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; அ.முரளிதரன், மதுரை.

மொகேர் இனத்தவரின் ‘இறந்தவர்களின் திருமணம்’ படிக்க படிக்க வியப்பு.
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; க.நஞ்சையன், பொள்ளாச்சி; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; செம்மொழி, சேலையூர்; ஜெயசந்திரபாபு, சென்னை.

ஆர்ட் டைரக்டர் சுரேஷ் செல்வராஜனின் செட் ஸ்டில்கள் மிரட்டல்.
- அ.யாழினி பர்வதம், சென்னை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; கைவல்லியம், மானகிரி; நிலவழகு, நீலாங்கரை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

தக்கையில் செருப்பா! அதில் இத்தனை டிசைனா! செருப்புக்கு புதுமரியாதை.
- அ.யாழினி பர்வதம், சென்னை; மயிலை.கோபி, திருவாரூர்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; மியாவ்சின், கே.கே.நகர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு; கைவல்லியம், மானகிரி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; சாய்கவின், பொள்ளாச்சி; ரா.புனிதவதி, பொள்ளாச்சி; மனோகர், மேட்டுப்பாளையம்.

இந்த மனித சாதியை மாற்ற முடியுமா என்ன? ‘டேனியல்’ சிறுகதைக்குப் பாராட்டுகள்.
- பிரேமா ராஜ்குமார், குன்னூர்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.