அஞ்ச் பன்ச் -ரகுல் ப்ரீத் சிங்*அஜித், விஜய்யோடு படங்களில் நடிக்கப் பிரியம். அது வரும் போது வரட்டும் என காத்திருக்கிறார்.                          

*கராத்தேயில் ப்ளாக் பெல்ட் வரை போனதால் நெருங்கிப் பேச ஸ்கூல் நண்பர்களுக்கு பயம்.

*சென்னையில் செட்டிலாகும் யோசனையில் இருக்கிறார். தில்லி முழுக்க நண்பர்கள் என்பதால் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

*அழகிப் போட்டியில் ஜெயித்துவிட்டு 16 வயதில் சினிமாவிற்கு வந்தவர். மாடலிங் வழி வந்தவர் என்பதால் நிலைத்திருப்பதற்கான நுணுக்கமும் கற்றவர்.   

*விளையாட்டில் கிரிக்கெட் பிடிக்கும். ஆனால்,கோல்ஃப் விளையாட்டில் சாம்பியன். மூன்று ஜிம்களை வைத்திருக்கிறார்.

நன்மதி