ஏரியா லிட்ரேச்சர்லோஹிப்பு ஜீன்ஸூ... கோலிவுட்டு டான்ஸூ!

சினிமா நடிகை
போடுது லோஹிப்பு
ஜீன்ஸூ
குத்துவிளக்கு
உனக்கெதுக்கடி
கோலிவுட்டு டான்ஸூ!

கேர்புல்லா
இருந்துக்கோ
தமிழ்ப்பொண்ணா
நடந்துக்கோ
அடிச்சிப் புடிச்சி
பெத்தவன் காட்டும்
ஆளைப்புடி
காலமெல்லாம்
காப்பாத்துவான்
ஆட்டோவாச்சும் ஓட்டி!

அடடா
பொண்ணுங்களா
அலங்காரக்
கண்ணுங்களா
அடக்க ஒடுக்கம்
வேணுமடி
தென்னைமரக்
கன்னுங்களா!

ஜிகிரிதோஸ்த்து
ஜொள்ஸு வுட்டா
லவ்ஸ் அடிக்கத்
தோணும்
மஞ்சத்தாலி
கட்டச் சொன்னா
டைவ் அடிச்சி ஓடும்!

இடுப்பைக் காட்டி
இளிக்காதே யக்கா
கானா பாட்டு
பாடறேன் பாரு
ஷோக்கா!

சீத்தலைப் பாட்டனார்