பெரியம்மா!அமைதிப்புறாவாக பறக்க விரும்புகிறார் காஜல் அகர்வால். புத்தாண்டு அன்றே மும்பையில் நடந்த மராத்தனில் அமைதியை (think peace) வலியுறுத்தி ஓடி மகிழ்ந்திருக்கிறார்!‘‘2018 ரொம்ப ரொம்ப ஹேப்பியா அமைஞ்சது. ஆசைப்பட்டதை விட அதிகமாகவே எல்லாம் கிடைச்சது. அமேஸிங் ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் இல்லேனா அதெல்லாம் சாத்தியமாகியிருக்காது.

என் சந்தோஷத்துக்கு இன்னொரு காரணம், என் தங்கையோட குழந்தை இஷ்ஹான்! இந்த வருஷம் ரிலீசுக்கு நிறைய படங்கள் காத்திருக்கு. ‘பாரீஸ் பாரீஸ்’, ‘இந்தியன் 2’, ‘கோமாளி’, ‘சீதா’னு ஷூட்டிங்கும் போயிட்டிருக்கு...’’ என பூங்கொத்தாக புன்னகைக்கிறார் காஜல்!