கர்ப்பிணியை தூக்கிய போலீஸ்உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவிலுள்ள ரயில்வே நிலையத்தில் போலீஸ்காரர் சோனுகுமார், கோர்ட்டுக்கு செல்லும் அவசரத்திலிருந்தார். அப்போது ரயிலில் பயணித்த நிறைமாத கர்ப்பிணி பாவனாவுக்கு திடீரென பிரசவ வலி எடுக்க, பயத்தில் அலறினார்.

உடனே அவரை அருகிலுள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு சென்ற சோனுகுமார், ஸ்ட்ரெட்ச்சர் கிடைக்க தாமதமானதால் கர்ப்பிணிப்  பெண்ணின் உயிரைக் காப்பாற்ற அவரைக் கைகளால் தூக்கிக் கொண்டு ஓடி தாயையும் சேயையும் காப்பாற்றியுள்ளார்! “பாவனாவுக்கு  பிரசவ வலி எடுக்க அவரை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல அவரின் கணவர் மகேஷ் உதவிகேட்டுக் கொண்டிருந்தார். ஆம்புலன்சை  அழைத்தும் சரியான நேரத்தில் வரவில்லை என்பதால், அவரை நானே கைகளில் தூக்கிச்செல்லும் சூழல் உருவானது...” என்கிறார்  மனிதநேய போலீஸ்காரர் சோனுகுமார்.

-ரோனி