பீகார் பாடநூலில் பாகிஸ்தான் சிறுமி!



பீகார் பாடநூலின் அட்டையில் பாகிஸ்தான் சிறுமியின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது முதலமைச்சரின் அலுவலகம் வரை சென்று  சர்ச்சையாகியுள்ளது.

ஜமூய் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க கொடுத்த அரசு பாடநூலில்தான் பாகிஸ்தான் சிறுமி படம் அச்சிடப்பட்டுள்ளது.  ‘‘இதுகுறித்து முதல்வர் அறிக்கை கேட்டுள்ளார்...’’ என்கிறார் பாட்னாவைச் சேர்ந்த அதிகாரி. பாட்னாவைச் சேர்ந்த சுப்ரப் என்டர்பிரைஸ் என்ற பதிப்பு  நிறுவனத்தின் தவறாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அட்டையில் படம் அச்சிட இணையத்தில் படம் தேடியிருக்கிறார்கள். இந்திய முகம் போல  இருக்க, சட்டென்று அச்சிறுமியின் படத்தை லேஅவுட் செய்து அச்சிட்டுள்ளனராம்!  

ரோனி