பந்திக்கு முந்து!
எவ்வளவு சிக்கல், பிரச்னை என்றாலும் சாப்பாடு விஷயத்தில் நாம் கெட்டிதான்.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்தமகன் தேஜ் பிரதாப்புக்கு திருமணம் நடைபெற்றது. மணமகள், கட்சி எம்எல்ஏவான சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய். அரசியல் திருமணம் என்பதால் லம்பாக சோறு கிடைக்கும் என்று கூடிய தொண்டர் பிளஸ் மக்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் அதிகம்.
கல்யாணம், ரிசப்ஷனை சிறிது நேரம் ஆர்வமாக கவனித்த மக்கள், ஒரு கட்டத்தில் சமையலறையை நோக்கிப் பாய்ந்தனர். இதை எதிர்பார்க்காத பாதுகாப்பு ஆட்கள் அவர்களைத் தடுப்பதற்குள் பல்வேறு சாப்பாட்டு ஐட்டங்களை குண்டானோடு தூக்கிக்கொண்டு ஓடிவிட்டனர்! இப்போது, காணாமல் போன பொருட்களுக்கு கேட்டரிங் கம்பெனி கணக்கு எழுதி வருகிறது!
ரோனி
|