வயதானவர்களுக்கு ஆதரவு!
இந்தியாவில் பெற்றோர்களைத் தாக்குவதும், ஆதரவற்று சாலையில் கைவிடுவதும் அதிகரித்து வருகிறது.
இப்படி இரக்கமற்று நடந்து கொள்ளும் பிள்ளைகளுக்கு 3 மாத சிறைத்தண்டனையை ஆறு மாதமாக மத்திய அரசு உயர்த்தவுள்ளது. இந்திய அரசின் சமூகநலத்துறை 2007ம் ஆண்டு உருவாக்கிய சட்டத்தில் உயிரியல் ரீதியான பிள்ளைகள், பேரன்கள் மட்டுமே தண்டனைக்குள்ளாகும் வரைமுறை, இப்போதைய 2018ம் ஆண்டு திருத்தத்தில் விரிவாகியுள்ளது.
இதன்படி, பெற்றோர்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்காத மருமகன், மருமகள், பேரன்கள் என அனைவரும் தண்டனை பெறும் வகையில் பெற்றோர் நலம் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் 2018 தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெற்றோர்களுக்கு வழங்கும் மாத பராமரிப்புத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது.
ரோனி
|