கொலையும் செய்வா..?!



பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணம். மனம்கொள்ளாத மகிழ்ச்சியோடு சரஸ்வதிக்கு மங்கலநாணை முடிச்சிட்டார் ஆந்திராவின் விழியாநகரத்தைச்  சேர்ந்த யமகா கௌரிசங்கர்.

ஒருநாள் தம்பதிகள் ஷாப்பிங் சென்றிருக்கின்றனர். வழியில் ‘ரெஸ்ட் ரூம்...’ செல்ல வேண்டும் என சரஸ்வதி இறங்கிக் கொண்டார். அந்தப் பக்கம் இவர் சென்றதும் இந்தப் பக்கம் மூன்று பேர் பைக்கில் வந்து இரும்பு ராடால் கெளரிசங்கரின் தலையைப் பிளந்துவிட்டுப் பறந்தனர்.  திரும்பி வந்த சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் மிதந்த தன் கணவரைப் பார்த்துப் பதறி ‘கொலை... கொலை...’ என அலறியிருக்கிறார். விசாரணையில்,  திருமணத்துக்கு முன்பே சரஸ்வதிக்கு ஓர் ஆணுடன் காதல் இருந்திருப்பதும், தன் திருமண மோதிரத்தை கூலிப்படையினரிடம் கொடுத்து அவரே  கொலை செய்ய வைத்தார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

ரோனி