கவிதை வனம்
குதிரைகள்
என்ன நிகழ்ந்ததோ எட்டு வயதிற்கு என்ன நிகழ்கிறதோ ஆறு வயதிற்கு என்ன நிகழப்போகிறதோ ஐந்து வயதிற்கு உனக்கொன்று தெரியுமா என் வீட்டிலிருந்து சிறிது தூரம்தான் தள்ளி நிற்கின்றன உனது குதிரைகள். உன்னைக் காணாமல் கலங்கிய கண்களோடு வீடுதிரும்பாதலையும் குதிரைகளுக்கு என்னிதயம் இன்றைய மேய்ச்சல் நிலமானது சவாரி செய்ய ஆசைப்படும் எனது மகளை அது நீ என்றே நம்புகிறது உன் குதிரைகளுக்கும் எனது மகளுக்கும் எப்படியுரைப்பேன் எட்டாம்நாள் கடவுளும் கற்பழித்தானென!? இன்று உனது தந்தையின் கண்ணீராய் இருப்பது நாளை மற்றொரு தந்தையின் கண்ணீராகிறது. மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
- நிலாகண்ணன்
|