சுவடுகள்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


சுயம்வரம்
!

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


நடிகை ராக்கி சாவந்த் வழியில் டி.வி&யில் சுயம்வரம் நடத்தி திருமணம் செய்துகொள்ள வந்திருக்கிறார் நடிகை ரத்தன் ராஜ்புத். இவரைக் கரம்பிடிக்க 54 ஆயிரத்து 863 அப்ளிகேஷன்கள் வந்திருக்கின்றன. சில பாகிஸ்தான் ஜொள்ளர்களும் இதில் அடக்கம்!







ஸ்டாப்!

Kungumam magazine, Kungumam weekly 
magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly
magazine, Weekly magazine



நடிகை பிபாஷா பாசு நடிக்கும் முதல் ஹாலிவுட் படமான ‘சிங்குலாரிட்டி’யின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கார் கோட்டையில் தொல்லியல் துறை விதிகளை மீறி ஷூட்டிங் செய்ததால் இந்த நடவடிக்கை.







விலகல்!

Kungumam magazine, Kungumam weekly 
magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly
magazine, Weekly magazine


ஏற்கனவே அதிபர் பதவியிலிருந்து விலகிய பிடல் காஸ்ட்ரோ, கியூபா கம்யூனிஸ்ட் கட்சியில் தான் வகித்துவந்த பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டார். கட்சியின் 46 ஆண்டு கால வரலாற்றில், அவர் பொறுப்பில் இல்லாமல் இருப்பது இதுவே முதல் முறை!







பரிசு!

Kungumam magazine, Kungumam weekly 
magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly
magazine, Weekly magazine

மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான புலிட்ஸர் பரிசை வென்றிருக்கிறார் அமெரிக்கவாழ் இந்திய டாக்டர் சித்தார்த்தா முகர்ஜி. ‘தி எம்பரர் ஆஃப் ஆல் மெலடிஸ்: எ பயாக்ரபி ஆஃப் கேன்சர்’ என்ற அந்தப் புத்தகம், புற்றுநோய் பற்றிய அனைத்து விஷயங்களையும் சொல்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு போன்ற வடிவத்தில் உள்ள நூல் இது. ‘‘புற்றுநோயை புதிராக நினைக்கும் மக்கள் அந்த அவலத்திலிருந்து மீள வேண்டும். அதுவே எனக்கு நிஜமான பரிசு’’ என்கிறார் முகர்ஜி.

நார்மல்!

‘இந்த ஆண்டு பருவமழை இயல்பான அளவு பெய்யும்’ என்ற மகிழ்ச்சிதரும் செய்தியை அறிவித்திருக்கிறது இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை. ‘‘வடமாநிலங்களில் தாமதமாக கோடை துவங்கியது ஒன்றுதான் கவலை அளிக்கும் அம்சமாக இருக்கிறது. மற்றபடி இயல்பான அளவு பெய்வதற்கு 98 சதவீத வாய்ப்பு இருக்கிறது’’ என்கிறார் இந்தத் துறையின் இயக்குனர் ஜெனரல் அஜித் தியாகி.



விடுதலை!

Kungumam magazine, Kungumam weekly 
magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly
magazine, Weekly magazine

பிரிவினைவாதத்தை தூண்டியதாகக் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பினாயக் சென்னுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. அவரது வழக்கு கையாளப்பட்ட விதம் குறித்து அதிருப்தியும் தெரிவித்தது உச்ச நீதிமன்றம். மனித உரிமைப் போராளிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது இருக்கிறது.





சாதனை!

Kungumam magazine, Kungumam weekly 
magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly
magazine, Weekly magazine
நீர் மற்றும் நில ஆராய்ச்சிக்கான மூன்று செயற்கைக்கோள்களை கடந்த புதன்கிழமை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை படைத்திருக்கிறது பிஎஸ்எல்வி&சி16 ராக்கெட். ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து ஏவப்பட்ட இது, முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டது. இந்த ஆண்டு இஸ்ரோ விண்ணில் செலுத்திய முதல் ராக்கெட் இது.