நியூஸ் வே





   சினிமா நடிகைகளின் இன்னொரு புறத்தைச் சொல்லும் ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ என்கிற படத்தில் நடிகையாக வருகிறார் சோனியா அகர்வால்.

‘ரெடி’ பட ஷூட்டிங்குக்காக இலங்கை சென்று ‘சமூகசேவை’ செய்த அசினை திட்டித் தீர்த்தவர்கள் வாய்க்கு அடுத்த அவல் ரெடி. தீபா மேத்தா இயக்கும் ‘விண்ட்ஸ் ஆப் சேஞ்ச்’ பட ஷூட்டிங்குக்காக இலங்கை போயிருக்கிறார் ஸ்ரேயா. ‘இலங்கை இயற்கை வளம்மிகுந்த நாடு. படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்கள் இங்கு நிறைய உள்ளன...’ என்று அங்குள்ள மீடியாக்களுக்கு பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

‘இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன்’ என்று அறிவித்து இளசுகளின் இதயத்துடிப்பை எகிற வைத்தார் மாடல் அழகி பூனம் பாண்டே. ‘நிர்வாண போஸ் கொடுத்தால் இரண்டே கால் கோடி ரூபாய் தர ரெடி!’ என சர்வதேச பத்திரிகை ஒன்று அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அம்மணி இன்னும் பதில் சொல்லவில்லை.