பிரபுதேவாவுக்கு ஹன்சிகா ஊட்டிய ஹாட் கேக்...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 
                  அந்த மேடை அத்தனை நட்சத்திரங்களைத் தாங்குமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. பிரபுதேவா, ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் ஹரீஷ் ராகவேந்திரா, சின்மயி, நரேஷ் அய்யர், மகதி, பிரஷாந்தினி, ரெனினா ரெட்டி, ஆலப் ராஜு, ரிச்சர்ட் என்று பாடக பாடகியருடன் நடன இயக்குநர் ஸ்ரீதரின் நடனக்குழுவினரும் இணைந்த நிகழ்வுக்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின் மென்ட்டின் ‘எங்கேயும் காதல்’ படத்தின் ஆடியோ விற்பனை விண்ணைத்தொட்டு பிளாட்டினம் டிஸ்க்கைத் தட்டிவிட, படத்துக்கான புரமோஷனுக்கு ஏற்படுத்தப்பட்ட வண்ணமிகு இசை நடன நிகழ்ச்சிதான் அது.

படத்தின் பாடல்களை இசைத்த அதே ஹாரிஸின் இசையில் பாடல்களைப் பாடிய பாடக, பாடகியர் நேரடியாகப் பாட, நடனக்கலைஞர்கள் ஆட, பட அனுபவங்களை நட்சத்திரங்கள் பகிர்ந்து கொள்வதோடு நின்று விடாமல் அந்தப் பாடல்களுக்கு வேறு கான்செப்ட் அமைத்து ஜெயம் ரவி, ஹன்சிகாவும் இடம்பெறும் நடனங்களை அமைத்துக்கொண்டிருந்தார் ஸ்ரீதர். அதில் ‘மாஸ்டர் டச்’ சேர்த்துக்கொண்டிருந்தவர் படத்தின் இயக்குநர் பிரபுதேவா. அப்போதைய நிகழ்வுகள் படத்தை மிஞ்சிய கூடுதல் சுவாரஸ்யங்கள்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine

Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


டைட்டில் பாடலாக இடம்பெற்ற ‘எங்கேயும் காதல்’ பாடலை, அதைப் பாடிய ஆலப் ராஜுவும், ரெனினா ரெட்டியும் இசையுடன் இணைந்து பாட, மேடையின் மீது உயரமாக அமைக்கப்பட்டிருந்த ‘எங்கேயும் காதல்’ செட்டின் பக்கங்களிலிருந்து ஜெயம் ரவியும், ஹன்சிகாவும் கையில் ஏந்திய சிகப்பு ரோஜாக்களுடன் படியிறங்கி கீழே வந்தார்கள். பாடலின் ஒரு பகுதி முற்றுப்பெற கலைஞர்கள் மேடையை விட்டு அகல, ரவியும், ஹன்சிகாவும் மட்டும் வைத்த கண் வாங்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஐஸ்வர்யா வந்து ரவியின் கையிலிருந்த பூவை வாங்கியதும்தான் இருவரும் சுய நினைவுக்கு வந்தார்கள். சட்டென்று சுதாரித்த ஹன்சிகா தனக்கு ரவி கொடுக்கவிருந்த ரோஜாவை ஐஸ்வர்யா கையில் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து டென்ஷனாகி, தாவி அதைப் பிடுங்க, ஐஸ்வர்யா கலாய்த்ததில் அரங்கமே இரண்டுபட்டது.

அடுத்து ‘தீயில்லை...’ பாடலுக்கு ரவி, ஹன்சிகா, பிரபுதேவா மூவரும் மேடைக்கு ஆடிக்கொண்டே போக, அதுவரை அமர்ந்திருந்த ஹாரிஸும் ஆட்டத்தில் கலக்க, அமளிதுமளியாக முடிந்தது அந்தப்பாடல்.

‘‘டான்ஸிலும் கலக்கிட்டீங்களே..? ’’ என்று ஹாரிஸை கலாய்த்தால், ‘‘இதை டான்ஸ்னு சொன்னா நானே ஒத்துக்க மாட்டேன். ஆட்டம்னு வேணா சொல்லுங்க...’’ என்றவர், ‘‘ஆடியோ சிடியில ஏழு பாடல்கள்தான் இருக்கும். ஆனா படத்தில பாருங்க, சர்ப்ரைஸா எட்டு பாடல்கள் வச்சிருக்கேன்...’’ என்று கண்சிமிட்டிவிட்டுப் போனார்.

நிகழ்ச்சியில் திடீர் சலசலப்பாக சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மேடையேற, அவரைத் தொடர்ந்து மேடையேறியது மெகா சைஸ் பிறந்த நாள் கேக். எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்க்க, அன்றைக்கு பிரபுதேவாவின் பிறந்தநாள் என்று தெரிந்தது. யூனிட் மொத்தமும் ரவுண்டு கட்டி பிரபுதேவாவுக்குப் பிறந்த நாள் பாடலைப் பாட, கேக்கை வெட்டினார் நடனப்புயல். முதல் துண்டை அவர் ஜெயம் ரவிக்கு ஊட்டியபின் இன்னொரு துண்டை கையில் எடுத்து நாகரிகமாக ஹன்சிகாவின் கைகளில் தர, அதை வாங்கிய ஹன்சிகா, பிரபுவுக்கே ஊட்டிவிட... களை கட்டியது மேடை.

‘‘எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ, கேக் கட் பண்ண வச்சு அசத்திட்டாங்க...’’ என்று புருவம் விரிந்த பிரபுதேவாவை ஓரம் கட்டி, ‘‘சிக்கவே மாட்றீங்களே... எங்கேயும் காதல் பற்றிச் சொல்லுங்க...’’ என்று அன்புக் கொக்கி போட்டோம். சிக்கியவர் சிரித்தபடி பேசினார்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine

Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


‘‘தென்றல்ல இறகு பறக்கிற மாதிரியான மென்மையான காதல் கதை. இந்திய மனத்தோட வெளிநாட்டில வசிக்கிற ஒரு இந்தியப்பெண்ணுக்கும், வெளிநாட்டு எண்ணத்தோட இருக்கிற ஒரு இந்திய இளைஞனுக்கும் வர்ற காதல் கதை இது. அதனால கொஞ்சம் இந்தியாவிலயும் மீதி முழுக்க பிரான்ஸ்லயும் எடுக்கப்பட்ட படம். நவநாகரீகத்துக்கு உதாரணமான இடமா இருக்கிற பிரான்ஸ், கலர்ஃபுல்லான இந்தக் காதல் கதைக்குப் பொருத்தமான இடமா ஆகிப்போச்சு. ‘எங்கேயும் காதல்’ங்கிற தலைப்புக்குப் பொருத்தமா எங்கே பார்த்தாலும் கொத்துக் கொத்தா காதல் ஜோடிகள் கட்டுண்டு கிடக்கிற இடம் அது.

காதலர்களுக்கு றெக்கை முளைக்கும் இந்த இடத்திலதான் எங்க ஹீரோ ஜெயம் ரவிக்கும், ஹன்சிகாவுக்கும் காதல் முளைக்குது. இந்தக் கதைக்குன்னே அளவு கொடுத்து செஞ்ச மாதிரி அழகான ஜெயம் ரவி அமைஞ்சதும், அவருக்குப் பொருத்தமான தேவதையா ஹன்சிகா கிடைச்சதும் அற்புதமான விஷயம். முன்பு கார்த்திக் - குஷ்பு ஜோடி எப்படிப் பேசப்பட்டதோ அப்படி கலக்கும் இந்த ஜோடி. ஹாரிஸ் இசை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர் இசைல அமைஞ்ச ஃப்ரெஷ்ஷான பாடல்களை ஆஸ்திரேலியா, கிரீஸ், நியூஸிலாந்துன்னு பறந்து பறந்து படம் பிடிச்சு ட்ரீட் கொடுத்திருக்கார் நீரவ் ஷா.

இப்படிக் கேட்டதெல்லாம் கிடைச்சதுக்கு படத்தைத் தயாரிச்ச கல்பாத்தி அகோரம் சாருக்குத்தான் முதல்ல நன்றி சொல்லணும். இப்ப இது ‘சன் பிக்சர்ஸ்’ கைல வந்ததில உலகமெல்லாம் அங்கீகாரம் கிடைக்கப் போறது எல்லையில்லாத சந்தோஷம். பாருங்க, இந்த ப்ரமோ ஷோவே ஷூட்டிங் போல எப்படிக் களை கட்டிடுச்சுன்னு. இந்த உச்ச மகிழ்ச்சி எப்போதாவது கிடைக்கிற ஆச்சரியம். இந்த சர்ப்ரைஸ் பேக்கேஜோட சந்தோஷத்தை நீங்களும் அனுபவிக்க கொஞ்சமே கொஞ்ச நாள் பொறுத்துக்கங்க..!’’

வேணுஜி