கவிதை காற்று



Untitled Document



கவிஞர் பழநிபாரதியின் 'காற்றின் கையெழுத்து' ஓர் அழகிய கவிதை. உடன் இணைந்து வரும் இளையராஜாவின் வண்ண ஓவியங்களும் மனதை வருடுகின்றன.
- அ.முஹம்மது நிஜாமுதீன், நீடூர்்..


'அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள்' பற்றி வாசிக்கும்போது நெஞ்சம் கனக்கிறது. நாளை நம் வரலாற்றுப் பதிவில் இந்த இசைக்கருவிகள் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
- பூ.திலகவதி, சிதம்பரம்.


 
மோகன் சுந்தர் பாண்டியனின் ஓல்டு வாள் துப்பாக்கி கலைச்சேகரிப்பு விவரக் கட்டுரைதனைக் கண்டு இன்பம் கொண்டேன்.
 
- எல்.எம்.மங்கை, திருவண்ணாமலை.


'அன்பே உலக மக்களை உய்வித்துக் காக்கும் உன்னத வழி' என வாழ்ந்து காட்டிய இயேசு பிரானின் கல்லறை நோக்கிய சாந்தகுமாரி சிவகடாட்சத்தின் புனிதப்பயணத்தில் தெய்வீகம் கனிந்திருந்தது.
- சம்பத், வேலாயுதம்பாளையம்.


இருமலுக்கு சுக்கு மிளகு திப்பிலியென அஞ்சறைப்பெட்டியிலேயே அற்புத மருந்து இருக்கும்போது, இருமல் மருந்து அபாயமென அலறுவானேன்! போதைப் பழக்கமாகும் என கதறுவானேன்!
- அ.யாழினி பர்வதம், சென்னை-78.


பட்டிமன்றம் என்றாலே அய்யா பாப்பையாவுக்குத்தான் முதலிடம். உழைப்பை அர்ப்பணித்து சிகரத்தை அடைந்திருக்கும் அய்யாவின் தொண்டு பொன் எழுத்துகளால் கோர்க்கப்பட வேண்டிய ஒன்று.
- ஆர்.கே.லிங்கேசன்,
    மேலகிருஷ்ணன்புதூர்்.



இந்த வாரம் வெளிவந்த அனைத்து ஒருபக்கக் கதைகளும் அக்மார்க் ரகம். குறிப்பாக ஜோதிர்லதா கிரிஜா எழுதிய 'நட்பு' மனதை நெகிழ வைத்து விட்டது.
- எஸ்.மந்திரமூர்த்தி,
      புதுச்சத்திரம்.்.



முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி எழுதும் 'ஒரு எஸ்.பி.யின் டைரி' செம த்ரில்லிங்காக இருக்கிறது.
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.


தமிழ்ப்படங்களின் சாதனை வரலாற்றில் மைல்கல்லாக, விக்ரமின் கலைத்திறனுக்கு இன்னொரு வெற்றிச்சின்னமாக 'தெய்வத்திருமகன்' திகழுமென்பதை விஜய் பேட்டி உணர்த்துகிறது!
 
- எஸ்.சங்கீதா ராஜன், புதுச்சேரி.


நிதானமும் அமைதியும் கொண்ட மிஸ்டர் கூல் & கேப்டன் டோனி. பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் நெஹ்ராவை இறக்கியது அவரது தன்னம்பிக்கையை உணர்த்தியது.
 
- ஆர்.தனபால், சென்னை-63.


தனது போராட்டத்தை 'பிளாக்மெயில்' என்று சொன்னால் நாட்டு மக்களுக்காக திரும்பத் திரும்ப பிளாக்மெயில் செய்ய தான் தயாராக இருப்பதாகச் சொல்லியுள்ள அன்னா ஹசாரே பின்பற்றப்பட வேண்டிய ரோல் மாடல்.
- அ.குணசேகரன், புவனகிரி்.