ஆர்யாவுக்கு நன்றி சொன்ன பாலா...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 


                     னித்தனி வளையங்கள் தவிர்த்த நவீன தமிழ் சினிமா உலகம் ஆரோக்கியப்பட்டு வருவதாகவே தோன்றுகிறது. தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இருக்கும் ஒவ்வாமை, இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் இருக்கிற ஈகோ மோதல், ஒரு ஹீரோவுக்கும் இன்னொரு ஹீரோவுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அனைத்தையும் உடைத்துப் போட்டது ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாலா இயக்கியிருக்கும் ‘அவன் இவன்’ ஆடியோ வெளியீட்டு விழா.

தன் சீடனுக்காக ஆடியோவை வெளியிட வந்திருந்த பாலுமகேந்திரா, பாலாவின் நகைச்சுவை உணர்ச்சியைப் பற்றிப் பேசியது ஒரு ஆச்சரியம் என்றால், படத்தின் நாயகர்களான ஆர்யாவும், விஷாலும் ஒருவரை ஒருவர்... சந்தடி சாக்கில் பாலாவையும் கலாய்த்தது அநேகமாக இதுவரை நடந்திராத நிகழ்வு.

சம்பிரதாயமாக ஆர்யா மைக்கைப் பிடித்தபோது, தொடர்ந்து விஷாலை அவர் பிடிபிடியென்று பிடிக்கப்போகிறார் என்பது தெரியவில்லை. ‘‘படத்தில விஷாலுக்கு மாறுகண். அப்படிப் பார்த்து நடிக்கிறது ரொம்பவும் கஷ்டம். தலை சுத்தும். அதுலயும், ‘அந்தக் கண்ணோட லெஃப்ட்ல பார்த்துட்டு அப்படியே பேன் பண்ணி ரைட்ல பாரு...’ன்னுவார் பாலா. விஷால் என்கிட்ட வந்து, ‘என்னடா இது, என்னை பிறவியிலேயே மாறுகண் உள்ளவனைப்போல நடத்தறார் இவர்...’னு கேப்பான்.

இப்படியே தொடர்ந்து கண்ணை மாத்தி மாத்தி நடிக்கவே நைட்ல ‘ஆஃப்’ அடிச்சுட்டுத்தான் தூங்கப்போவான் அவன். ஷூட்டிங் முழுக்க அப்படியே பழகியதால இப்பகூட நைட்ல கட்டிங் போட்டுதான் தூங்கறான்...’’ என்று விஷாலை ஆர்யா போட்டுப் பார்த்தபோது பாலாவும் ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து பேச வந்த விஷால், ‘‘பாலா அண்ணன் படத்தில ஆர்யாதான் நடிக்க வாய்ப்பு வாங்கித் தந்தான்...’’ என்று கூலாக ஆரம்பித்து கடைசியாக ‘மேட்டரு’க்கு வந்தார். ‘‘படத்தோட ஷாட்ஸ் பாத்து மிரண்டுபோன நான் ஒருநாள் ஆர்யாகிட்ட, ‘சில ஷாட்ஸ் எல்லாம் சத்யஜித்ரே படம் போல வந்திருக்கு...’ன்னுட்டுப் போயிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு என்கிட்ட வந்து, ‘இந்தப்படத்துக்கும், ‘பாணா காத்தாடி’ படத்துக்கும் என்னடா சம்பந்தம்...’னு கேட்டான். ‘எதுக்குக் கேட்கறே..?’ன்னு நான் கேட்க, ‘இல்ல... ஒருசில ஷாட்ஸ் ‘சத்யஜோதி’ படம் போல வந்திருக்குன்னு சொன்னியே, அதான் கேட்டேன்...’னான். ‘அடப்பாவி, அது சத்யஜித்ரேடா...’ன்னு நான் சொல்ல, ‘அது யார்ரா மச்சான்..?’னு கேட்டான். சினிமாவில அவ்வளவு அப்டேட்டானவன்...’’ என்ற விஷால், விடாமல் ‘‘ஆனா ‘மத்த’ விஷயங்கள்ல எல்லாம் பயங்கர அப்டேட்டா இருப்பான்..!’’ என்று இன்னொரு குட்டும் வைத்தார்.

அளவாகப் பேசும் பாலாகூட, ‘‘இந்தப்படம் நடந்ததுக்கு நான் ஆர்யாவுக்குத்தான் நன்றி சொல்லணும்...’’ என்று ஆரம்பித்து தொடர்ந்தார். ‘‘ஒருநாள் ஆர்யா வந்து, ‘இந்தப்படத்தில என்கூட விஷாலை நடிக்க வைக்கலாம்...’னான். ‘அவனை எனக்குத் தெரியாது. யோசிக்கலாம்...’னேன். அவனும் விடாம, ‘இல்ல... அவன் சரியா இருப்பான். பார்த்துப் பேசுங்க...’ன்னான். ‘சரிப்பா... ரெண்டு நாள் டைம் கொடு... யோசிக்கறேன்’னேன். ‘இல்லண்ணே... வாசல்லதான் நிக்கறான். கூப்பிட்டுப் பேசிடுங்க...’ன்னான். அடுத்து புரட்யூசரைத் தேடும்போது, ‘கல்பாத்தி அகோரம் சரியா இருப்பார்...’னான். ‘அவரை நான் பார்த்ததில்லையே...’ன்னேன். ‘இல்லண்ணே... நான் பேசிட்டேன். நீங்க வந்து மீட் பண்ணிட்டா போதும்...’னு கூட்டிக்கிட்டுப் போய் சந்திக்க வச்சான். இதுவரை நான் பண்ணிய நாலு படங்கள்லயும், புரட்யூசர் கூட ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தது. ஆனா புரட்யூசர் கூட பிரச்னையே இல்லாம முடிஞ்ச முதல் படம் இதுதான்...’’
 வேணுஜி