Q&A - உங்க மேரேஜ் லவ்வா? அரேஞ்ஜ்டா?‘‘கண்டிப்பா லவ் மேரேஜ்தான்! ஆனா, வரப்போற மாப்பிள்ளை இப்படியெல்லாம் இருக்கணும்னு கனவு, எதிர்பார்ப்பு எல்லாம் இல்ல. நல்ல மனசு, நல்ல புத்தி இருந்தா போதும். அவர் தம், சரக்கு அடிக்கக்கூடாதுனு கண்ட்ரோல் பண்ண முடியாது. அது விதி. அது இல்லாம இருக்கிறவங்க எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்கனு தீர்மானமா சொல்ல முடியாதே!

யாரையும் விரட்டி விரட்டி நான் லவ் பண்ணல. என்னையும் யாரும் துரத்தித் துரத்தி காதலிக்கல. என் ஃப்ரெண்ட்ஸ்  வட்டாரத்துல என் குணத்தை பார்த்து, ‘அய்யோ, ஸ்ருதியா... அவ ரொம்ப போல்டு. ஆம்பள மாதிரி குணம்’னு கலாய்ப்பாங்க. ஸோ, ஒரு மகா புருஷருக்காக ஸ்ருதி வெயிட்டிங்!’’ என்கிறார் ஸ்ருதிஹாசன்.

  ரஜினியை ஃபாலோ பண்றீங்களா?
‘‘ரஜினி சார் மேனரிசங்களை நான் ஃபாலோ பண்றதாவும், அவர் வருஷத்துக்கு 5, 6 படங்களாவது நடிச்சார்... நீங்க ஏன் ஒரு படம் மட்டும் நடிக்கறீங்கனும் பலரும் கேட்கறாங்க - உங்களை மாதிரியே. ஒண்ணு புரிஞ்சுக்குங்க. ஒரேயொரு ரஜினிதான். சரியா! அப்புறம் அவர் காலகட்டம் வேற. அப்ப ஃபர்ஸ்ட் ரிலீஸ், செகண்ட் ரிலீஸ்னு எல்லாம் இருக்கும். இப்ப ஒரு படம் ஒரே நேரத்துல 400, 500 ஸ்கிரீன்ஸ்ல ரிலீஸ் ஆகுது.

தவிர இப்ப படத்துக்கான முதலீடு அதிகரிச்சிருக்கு. அதை திருப்பி எடுக்க தயாரிப்பாளருக்கு அவகாசம் தேவைப்படுது. இதனாலதான் வருஷத்துக்கு ஒரு படம் பண்ண முடியுது. இதுக்கு மாறா ரெண்டு படங்களாவது ஆண்டு தோறும் கொடுக்கணும்னு நினைக்கறேன். பார்க்கலாம்...’’ என்கிறார் சிவகார்த்திகேயன்.

தொடர்ந்து படம் தயாரிப்பீங்களா? 
‘‘கண்டிப்பா!  என்னோட காமிக் புக் நிறுவனம் வழியா தயாரிச்ச ‘சென்னை 2  சிங்கப்பூர்’க்கு கிடைச்ச வரவேற்பைப் பார்த்து மலேஷியாவில் அதை வாங்கி  வெளியிட்டவங்க மறுபடியும் நாம சேர்ந்து ஒரு காமெடி படம் பண்ணலாமானு  கேட்டிருக்காங்க. சந்தோஷமா இருக்கு. அடுத்து ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட் மைண்ட்ல ஓடுது. முதன்  முதலா தயாரிப்பாளரானப்ப ஃபைனான்ஸுக்காக ரொம்பவே அலைஞ்சோம்.

கடவுள் புண்ணியத்துல இப்ப எங்கள நம்பி பணம் கொடுக்க நிறைய  பேர் முன்வர்றாங்க. ‘சென்னை 2 சிங்கப்பூர்’ தயாரிச்சு முடிக்க அஞ்சு  வருஷங்களாச்சு. இனிமே அப்படியொரு நிலை ஏற்படாது. அதிகபட்சம் ஒரு  வருஷத்துல படத்தை கொண்டு வந்திடுவேன்னு நம்பிக்கை இருக்கு!’’ என்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

படிக்க நேரம் கிடைக்குதா?
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின் போதும் நிறைய புக்ஸ் வாங்கறேன். கைல எப்பவும் கிண்டில் இருக்கு. ஓயாம உழைக்கவும் செய்யறேன். அப்படியும் படிக்கறேன். காரணம் மனசுதான். கிடைக்கிற டைம்ல படிக்கணும். உண்மையை சொல்லணும்னா, சினிமாவை விட புக்ஸ் படிக்கறது ரொம்ப பிடிக்கும். எல்லாத்தையும் வாசிப்பேன். நாவல், சிறுகதை, பயாகிரஃபினு. ஆன்லைன் டெலிவரி பயனுள்ளதா இருக்கு.

எந்த மூலைல இருந்தாலும் தேவையான புக்ஸை ஆர்டர் செய்றேன். சின்னச் சின்ன காத்திருப்புகளை இதுக்கு பயன்படுத்திக்கறேன். டிராவல்ல கிண்டில். ஒரு லைப்ரரியை நம்ம பாக்கெட்ல வைச்சுக்கலாம்! ஆக்சுவலா என்னை மனுஷனா, இயக்குநரா வைச்சுக்கறது புக்ஸ்தான்...’’ என்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தொகுப்பு: மை.பாரதிராஜா