கிராமத்துக்கு பர்த்டே!



இதுவும் ஆதார் அட்ராசிட்டிகளில் ஒன்றுதான். மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள பல்சோடா, தேவ்புரா, படா நகர், ஜெட்புரியா ஆகிய கிராமங்களில் விவரங்களை கிடுகிடு வேகத்தில் பதிவு செய்து மக்களுக்கு ஆதாரை அதிகாரிகள் அஞ்சலில் அனுப்பிவைத்தனர். பிரித்துப் பார்த்தால் -கிராமத்தில் பலருக்கும் ஒரே பர்த்டே. ஏறத்தாழ 5 ஆயிரம் பேருக்கு (80%) பிறந்த நாள், ஜனவரி 1 என ஆதாரபூர்வமாக ஆதாரில் பதிவாகிவிட்டது!

பிறந்தநாள் இடத்தை நிரப்பாதபோது, சாப்ட்வேர் தானாகவே அதனை ஜன.1 என நிரப்பிக்கொள்ளும் டிசைனால் ஏற்பட்ட குளறுபடி இது. வரும் ஆண்டு முதல் ஆதாரில் இணைக்காத சர்டிஃபிகேட்கள் எதுவும் செல்லுபடியாகாது என்ற நிலையில் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு, மக்களுக்கு கிடைக்கும் மானிய உதவிகளுக்கும் வேட்டு வைத்துள்ளது.                         

- ரோனி