மோடி டேட்டா!ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற வேர்ல்ட் எகானமிக் ஃபாரம் கூட்டத்தில் கம்பீரமாகப் பங்கேற்ற இந்தியப் பிரதமரான மோடி, ‘‘கடந்த 30 ஆண்டுகளில் 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் 600 கோடி இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது எங்கள் கட்சி...’’ எனப் பேசிவிட்டார். இந்தியாவின் மக்கள்தொகை 125 கோடி என்பதை மோடிஜி கூட்டத்தின் பரபரப்பில் ஜஸ்ட் மறந்துவிட்டதால் ஏற்பட்ட பிரச்னை இது.

மேலும் 125 கோடியிலும் 80 கோடிப் பேர்தான் தகுதியான வாக்காளர்கள் என்பது பிரதமர் அறியாத நிஜம். மேற்சொன்ன செய்தி டிவிட்டரில் வெளியாகி, பலரும் மீம்ஸ் அனுப்பத் தொடங்க உடனே செய்தி மாற்றப்பட்டுவிட்டது. அதை பலரும் ரீ டிவீட் செய்ய... மோடிஜி ஆன் தி ட்ரெண்ட்.      

- ரோனி