குடிமகனின் நேர்மை!அமெரிக்காவில் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த மைக்கேல் லெஸ்டர், காரில் சென்று கொண்டே இரண்டு பீர்களை ஒரு துளி வைக்காமல் குடித்தார். கூடுதலாக போதைப் பொருட்களையும் ஆன்மாவில் இணைத்தார். பின் செய்ததுதான் சூப்பர் ட்விஸ்ட். 911 நம்பருக்கு போன்செய்து, ‘நான் சரக்கடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறேன். இது சாலையிலுள்ள மற்றவர்களுக்கு ஆபத்து!  சீக்கிரம் வந்து என்னைக் கைது செய்யுங்கள்!’ என்று சொல்லியிருக்கிறார் மைக்கேல்.

உடனே போல்க் கவுண்டி போலீஸ் ஸ்பாட்டுக்கு போய் அவரை அரஸ்ட் செய்து தங்கள் கடமையை நிறைவேற்றினார்கள். அதோடு டெலிபோன் உரையாடலை போலீசார் இணையத்தில் பதிவேற்ற... மைக்கேலின் நேர்மைக்கு இன்டர்நேஷனல் இணையர்கள் கங்கிராட்ஸ் குவிந்துள்ளது.

- ரோனி