கவிதை வனம்
முத்தம்
குழந்தைக்கு நீ முத்தமிடுகிறாய் குழந்தையாகி அடம்பிடிக்கிறது மனம்.
இது போதும் எனக்கு ரகசியம் சொல்வதாய் என் காதோரம் வந்து கொடுத்த கள்ள முத்தம்.
முத்தம் உயிரின் பரிமாற்றம் வா பரிமாறுவோம் நம்மை நாம்.
- முகம்மது சையது முஸ்தபா

நிழல்
நீரில் மரத்தின் நிழல் மீன் கொத்தியை கடித்துக்கொண்டிருக்கின்றன மீன்கள்.
- நிரவி கஜேந்திரன்
|