பகவத்கீதை சொல்லும் முஸ்லீம் மாணவர்!
ராஜஸ்தானைச் சேர்ந்த நதீம்கான் மாநில அளவிலான சமஸ்கிருத கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றிருக்கிறார். அதிலும் பகவத்கீதை தொடர்பான போட்டி என்பதுதான் இதில் ஸ்பெஷல். அக்ஷய பாத்ரா என்ற அமைப்பு ஒருங்கிணைத்த போட்டியில் நதீம்கானுக்கு அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற இரு மாணவர்களும் இஸ்லாமியர்கள்தான். ராஜஸ்தான் மாநிலம் முழுக்க 200 பள்ளிகளிலிருந்து 8 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட போட்டி இது.
 கூலித்தொழிலாளியின் மகனான கான், ஆறு வயதிலிருந்து சமஸ்கிருத மொழியைக் கற்று வருகிறார். ‘‘சமஸ்கிருதம் கற்க மிக இயல்பான மொழி. தேர்வில் வென்ற என்னை இன்று பலரும் பாராட்டுகிறார்கள்...’’ என நெகிழ்கிறார் நதீம்கான். முதலிடம் பெற்ற நதீம்கானுக்கான பரிசை அவரது பெற்றோர் விரைவில் பெறவிருக்கிறார்கள்..
|