சாவுக்கு ஒரு சந்தை!
கோக்குமாக்கு கோளாறுகளை அமெரிக்கா மட்டும்தான் செய்யவேண்டுமா என்ன? ஜப்பானும் இதற்கு சளைத்ததல்ல. இறப்புக்கு மக்கள் அங்கு முன்னரே பக்கா ஸ்கிரிப்டோடு ரெடியாகிறார்கள். ஆண்டுதோறும் அந்நாட்டில் நடைபெறும் சுகாட்ஷூ என்ற விழா, முழுக்க இறப்பை எதிர்நோக்குபவர்களுக்கான ஸ்பெஷல் நிகழ்வு.
 இறப்பு பற்றிய செமினார்கள், இறந்தால் அவர்களின் இறப்பை கொண்டாட உதவும் பொருட்கள், ஈமச்சடங்கு சர்வீஸ் என அனைத்தும் இங்கு கிடைக்கும். அதோடு பூக்கள், போட்டோ, இன்டோர் சமாதி என அப்டேட்டுகளைத் தந்து அசத்துகிறார்கள். அடுத்த ஐம்பது ஆண்டுகளில் 30 மில்லியன் மக்கள் இறப்பார்கள் என கூட்டிக்கழித்துப் பார்த்த ஜப்பான் அதற்கு முன்கூட்டியே ரெடியாகிவிட்டது.
|