ஆப்கானிஸ்தானில் தீரன்!
மக்களின் உயிர் காக்கும் ராணுவத்தில் பிழைப்புக்காக சிலரும், சாதிக்க சிலரும் தம்மை இணைத்துக்கொள்கிறார்கள். இதில் இரண்டாவது பிரிவினர், எப்போதுமே சூப்பர் ஸ்பெஷல் என்பதற்கு ஆப்கனில் நடந்த சம்பவமே சாட்சி. காபூலில் பரபரப்பாக அரசியல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென கூட்டத்தை நோக்கி மர்ம மனிதர் வேகமாக நகர்வதை பார்த்து டவுட்டான பாதுகாப்பு அதிகாரி சயீத் பசாம் பாச்சா, உடனே அந்நபரைத் தாக்கி கிடுக்குப்பிடியாகப் பிடித்து ஸ்பாட்டை விட்டு அப்புறப்படுத்த துணிந்தார்.
 ஆனால் அதற்குள் அம்மனிதர் வயிற்றில் கட்டியிருந்த குண்டை வெடிக்க வைத்துவிட்டார். பலியான 14 பேர்களில் 7 போலீசாரும் அடக்கம். ‘‘மக்கள் கூட்டத்தில் நுழைய முயன்ற தீவிரவாதியை சயீத், தன் உயிரைத் தியாகம் செய்து தடுத்திருக்கிறார். அப்பாவி மக்களைக் காப்பாற்றிய சயீத் லெஜண்ட் ஹீரோ!’’ என நெகிழ்ச்சியாகிறார் சக போலீஸ்காரர் பஷீர் முஜாஹெத்.
|