QR சாதனை!
விற்பனைப் பொருட்களைப் பற்றிய டீட்டெய்ல்களை அறிய உதவும் க்யூஆர் கோடில் என்ன சாதனை செய்ய முடியும் என்று உலகம் கேட்பதற்குள் சீனா அதில் ரெக்கார்ட் செய்தேவிட்டது. ஹெனான் பகுதியைச் சேர்ந்த 2500 சியாஸ் தேசியப்பள்ளி மாணவர்கள் 5X51 அளவில் QR கோடை பிரமாண்டமாக உருவாக்கி ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள். சீனாவில் க்யூஆர் கோடுகளின் மூலம் கார், பைக் வாடகைக்கு எடுப்பதிலிருந்து பிச்சைக்காரர்களுக்கு சில்லறைகளைக்கூட வழங்க முடியும்.
 வெள்ளை, சிவப்பு என இருவேறு நிறங்களில் க்யூஆர் கோடை உருவாக்கிய மாணவர்களின் டிசைனை ஸ்கேன் செய்யவும் முடியும். இதனை சாத்தியப்படுத்திய திதீ எக்ஸ்பிரஸ் நிறுவனம், மாணவர்களுக்கு ஒரு மில்லியன் யுவான்களை வழங்கவிருக்கிறது. காசை மட்டுமல்ல, கூடவே வந்த சர்டிஃபிகேட்டையும் கையோடு வாங்கிவிட்டனர் சமர்த்து மாணவர்கள்.
|