இல் அறம்
- எஸ்.ஷங்கரநாராயணன்
திறந்த ஜோரில் அவனைப் பார்த்தாள். வெளியே ஏன் நிற்கிறான்? கதவைத் தட்ட வேண்டியதுதானே? இணக்கம் இல்லாத சூழலில் தன் வீடே தனக்கு அந்நியமாகி விட்ட அவலம் அது. அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் விலகி வழிவிட்டாள். இந்த இரண்டு மாதங்களில் அவர்கள் பேசிக்கொள்வதே கூட படிப்படியாய்க் குறைந்துகொண்டே வந்திருந்தது. இப்போது பேசாமல் இருப்பது பேச்சை விட சௌகர்யமாய் இருவருக்குமே இருந்தது. குப்பைத் தொட்டியை மூடி போட்டு மூடிக் கொண்டார்கள் இருவரும். மழை வருமா என பார்க்க அவள் கதவைத் திறந்திருந்தாள்.
 ஒரு பெரிய உரையாடலுக்குத் தயாராவது போல மழை மெல்ல தூற ஆரம்பித்தது. சட்டென அது வேகமெடுத்து விடும் என்று தோன்றியது. திரட்டிச் சேர்த்திருந்த மேகம் கசிய ஆரம்பித்திருந்தது. இனி வெடித்து மொத்த பாரத்தையும் அது கொட்டிவிடும் என்றிருந்தது. மணி ஆறு ஆறரை கூட ஆகவில்லை. அதற்குள் இந்த இருட்டு. மழை கிரகணம். இருந்த கடுப்பில் மழை ஏற்றிய வக்கிரத்தில் தேய்ந்து போன செருப்புகளை ஜாக்கிரதையாக வீடு வரை சேர்த்திருந்தான் அவன். வர வர எதில் சாதனை செய்வது என்று இல்லாமல் ஆகிவிட்டது.
உள்ளே குமுறும் மூர்க்கம். எரிமலை வெடிக்கக் காத்திருந்தாப் போல. ஏதாவது பேசி அவளைக் குத்திக் கிழிக்க அவனுக்கு ஆவேசம் வந்தது. என் வாழ்வில் இருந்த கொஞ்சமே கொஞ்சம் அமைதி, அதையும் இவள் சின்னாபின்னமாக்கி விட்டாள். என் குகைக்குள் நீ வேறு. குருடன் குருடனுக்கு வழி காட்டுவதா? வீட்டுக்கு வராமல் வரப் பிடிக்காமல் வெளியே சுற்றிக்கூடத் திரிந்தாகி விட்டது. இரவு பதினோரு மணிவரை கூட, தெரு அடையாளம் இல்லாமல், நோக்கம் இல்லாமல் கால் வலிக்க வலிக்க நடந்து கொண்டிருந்தான். பல தெரு நாய் அவனுக்குப் பரிச்சயமாகிவிட்டன.
எந்த வீட்டில் எந்த டிவி சானல் ஓடும் என்பதும் அவனுக்கு ஓரளவு தெரிந்தது. என்றாலும், ஹா, எல்லாவற்றுக்கும் முடிவு என்று இருந்தது. ஆனால், வாழ்க்கையில் தனது சிக்கலுக்கு மாத்திரம் முடிவே தெரியவில்லை. அவன் சோர்ந்து அயர்ந்து கால் தளர வீடு திரும்புவான். அவனுக்கு அவள் சோறு எடுத்து வைத்திருப்பாள். கதவு தாழிடாமல் இருக்கும். உள்ளே வருவான். விளக்கைப் போடவே யோசனையாய் இருக்கும். அவன் வந்ததை அவள் அறிவாள். அவள் தூங்குகிறாளா என்பதே சந்தேகம். எப்பவுமே அவள் விழித்தே இருந்ததாக அவன் உணர்ந்தான்.
சமையல் பகுதி விளக்கைப் போட்டுக்கொண்டு தட்டை எடுத்து வைத்துக்கொண்டு ருசியே தெரியாமல் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவான். அவள் சாப்பிட்டாளா தெரியாது. கேட்டதும் இல்லை. நாலு நாள் கேட்காமல் விட்டால் தானே பசிக்குச் சாப்பிட ஆரம்பித்து விடுவாள். அவர்கள் இருவரிடையேயான மௌனத்தில் மழையோ பெரும் சத்தம் எடுக்க ஆரம்பித்திருந்தது. மழை எதையோ முறையிடுவது போலிருந்தது. யாரிடம் முறையிடுகிறது அது. அதன் முறையிடல் என்ன புரிந்ததோ மரங்கள் ஊய் ஊய்யென்று பொங்கி எழும்பின.
எஜமானனைப் பார்த்த நாய் சங்கிலி மீறிக் கொந்தளிப்பது போல மழை கண்ட மரங்கள் உற்சாகம் காட்டினாப் போலிருந்தது. மழையின் சத்தமும் மரம் அசையும் சத்தமும் வெளியே கேட்டது. உலகம் இயக்கத்தில் இருந்தாப் போலிருந்தது. நல்லவேளை மழைக்கு முன் வீடு வந்ததாக நினைத்தான். நல்லவேளை கதவைத் திறந்தாள், இல்லாவிட்டால் கதவைத் தட்டி அவள் திறக்குமுன் நனைந்திருப்பான். வெளிமழை அவன் உக்கிரத்தைச் சொல்வது போல் இருந்தது. ஓட்டுக் கூரையில் அது விழும் நாராச ஒலி. சரிந்திறங்கும் ஓடு. ஓரங்களில் மாத்திரம் வீடு ஒழுகும். இந்த மழைக்கு உடனே மின்சாரத்தைத் துண்டித்து விடுவார்கள்.
 நினைக்கும்போதே விளக்குகள் அணைந்து தெருவே இருளில் மூழ்கியது. பைத்தியக்காரி பாட்டெடுத்தால் அவளை யாரும் அடக்க முடியாது, என்பதைப் போல மழை தன் பாட்டுக்குக் கொட்டி முழக்கிக் கொண்டிருந்தது. மணி என்ன இருக்கும்? தெரியவில்லை. இருட்டான அந்த அறை வீட்டில் அவன் உள்ளே வந்து ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டான். அவள் என்ன செய்கிறாள்? தெரியவில்லை. அவன் இந்த அறையில் இருந்தால் அவள் மறு அறைக்குப் போய்விடுவாள். அல்லது அவனே மறு அறைக்கு நகர்ந்து விடுவது வழக்கம். மழையும் இருட்டும் ஓரளவு சாதகமாக இருப்பதாக உணர்ந்த போதிலும், அவளது அருகாமையை உணராமல் ஒதுக்க முடியவில்லை.
விறுவிறுவென்று அவனே துரித நடையில் வீடு வந்து சேர்ந்திருந்தான். வியர்வைத் தீவு. அவள்முன் சட்டையை உரித்தெறிய முடியவில்லை. காலதாமதமாக ஊரெங்கும் சுற்றித் திரிந்தபின் வீடு வந்து சாப்பிட்டுப் படுக்க சௌகரியமாய் இருந்தது. இன்றைக்கு வெளியே இறங்கமுடியாது. மழை. இப்பசத்திக்கு விடுமா தெரியவில்லை. நமக்காவது இப்படி ஊர் சுற்றிவிட்டு தாமதமாக வீடு வந்து படுத்துவிட முடிகிறது. இவள்? இவள்நிலை என்ன... யோசனையை ஒதுக்கினான். உலகில் தனக்கு சாதகமாக எதுவுமே நடப்பதில்லை என நினைத்தான். மழைத் தண்ணீர் துணி துவைக்க நல்லது.
நன்றாக அழுக்குப் போகும், என்று தோன்றியது. ஒரு பீப்பாயை எடுத்து வாசல்பக்கம் ஓட்டில் இருந்து விழும் மழையைப் பிடிக்கலாமா என நினைத்தான். அதற்குள் அவள் அதைச் செய்தாள். ஒரு பீப்பாயை எடுத்துக்கொண்டு வாசல் பக்கம் போனாள். அவனைத் தாண்டி அவள் போக வேண்டியிருந்தது. அவன் எழுந்து நின்றவன் பீப்பாயை வாங்கிக்கொண்டான். கதவைத் திறந்தபோது அதுவரை அடக்கமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மழைச்சத்தம் திடீரென்று பெருகி இன்னும் ஆக்ரோஷமாய்த் தோன்றியது. சப்த விஸ்வரூபம். யாருக்கு எதற்கு இத்தனை கோபம் காட்ட வேண்டும் அது. தெரியவில்லை.
சட்டென அவசரமாய்க் குனிந்து மழைத் தாரை விழும் இடத்தில் பீப்பாயை வைக்குமுன் நனைந்து போனான். மழையின் கயிறைப் பிடித்து ஆட்டிவிட்டது காற்று. உள்ளே திரும்ப இருட்டில் விக்கிரகம் போல அவள் காத்திருந்தாள். அத்தனை கிட்டத்தில் அவள் நின்றது அவனுக்குத் துணுக்கென்றது. அவள் கையில் துண்டு இருந்தது. அவனுக்கு என்ன செய்யத் தெரியவில்லை. மழையில் இறங்கி நடந்து விட்டால் கூடத் தேவலை. இவள் காட்டும் இந்தக் கரிசனம்… எனக்குத் தேவையா? இதை அனுமதிப்பதா? பேசாமல் வாங்கிக் கொண்டு பக்கத்து அறைக்குப் போனான். அவள் கதவைச் சாத்தினாள். அதற்குள் வீட்டின் ஒரு அடி வரை மழை உள்ளே சிதறிப் பரவியிருந்தது.
எல்லாக் காரியத்திலும்அவர்களிடையே ஒரு சிறு நிற்றல், சின்னத் தயக்கம் என ஆகிப் போனதில் தரை நனைந்து விட்டது. அவன் நனைந்து விடடான். கிடுகிடு வென்று துவட்டிக் கொண்டான். மழையில் நனைந்ததற்கும் அதற்கும் லேசாய் குளிர் அடித்தது. மழை அவனை வீட்டினுள்ளே அடைத்து விட்டதாய் உணர்ந்தான். பெரும் கொந்தளிப்பான மழை அவனை அடக்க முற்பட்டது போல் இருந்தது. இப்படி இதுவரை நேர்ந்ததே இல்லை. அவனால் தன்னளவில் சமாளிக்க முடிகிற மாதிரியே அவன் இயங்கினான். அவளுக்கு அவனிடம் பேச இருந்தாலும் அவன் அதை அனுமதிக்காமலேயே இருந்தான். பதில் சொல்லாமலேயே கடந்து போகிறவனாய் இருந்தான்.
பேசலாம். ஆத்திரப் படலாம். கோபப்படலாம். அடிக்கவும் செய்யலாம். ஒன்று நிகழ்ந்தால் நல்லது. எதுவுமே நிகழாமல் இப்படியே காலம் போகிற அளவில் அவன் நடந்து கொண்டான். அவன் தானாகப் பேசப் போவது இல்லை என அவள் உணர்ந்தாள். வேறு வழியில்லாமல் அவள் பேசினாலும் பதில் சொல்கிறானில்லை. மாமியார் மாமனார், வேறு ஊரில். இதை எப்படி அவள் சமாளிப்பாள். ஆண்கள் குடும்பத் தலைவர்கள். அவர்களின் நிர்வாகத்தில் பெண்கள் நிழல் என அவர்களோடு இணைந்து பயணிக்கிறார்கள். அதுவே வழக்கம்… இவன் பிடி கொடுக்கிறானில்லை. நிழல் மாத்திரம் பிய்த்துக்கொள்வது எப்படி?
அவன் உள்ளறைக்குப் போனதும் அவள் இந்த அறைக்கு வந்திருந்தாள். உள் அறை சன்னல்களை கீழ்ப்பாதியை மாத்திரம் சாத்தியிருந்தாள். காற்று சுழன்றடித்ததில் சன்னல்கள் அதிர்வு கண்டன. அவன் எழுந்துபோய சன்னல் கதவுகளைச் சாத்தியதை அவள் இங்கேயிருந்தே கேட்டாள். அவளுக்கு அவனிடம் பேச வேண்டும். வீட்டுக்காரர் வாடகை கேட்டு வந்து போனார். இந்த இரண்டு இரண்டரை மாதங்களில் அவர்கள் வீட்டுக்கு யாருமே வந்தது இல்லை. அவன் அழைத்து வந்தது இல்லை. அவளும் வெளியே இறங்கி யாரிடமும் புன்னகைத்தது கூட இல்லை. அவன் எப்படி எடுத்துக் கொள்வான் தெரியாது. அவனே அவளிடம் சரியாகப் பேசவில்லை. இதில் மற்றவர்களோடு பேச்சு வார்த்தை என்ன?
வாசல் வேப்ப மரம், அடிக்கும் சுழற்காற்றில் சிறு கிளைகளை முறிய முறிய இழந்தாப் போலிருந்தது. கிளைகள் மேல் ஓட்டுக் கூரையில் மோதும் சத்தம். யாருக்கோ கோபத்தில் சாபம் இட்டு சத்தியம் செய்கிறாப் போலிருந்தது மரம். உலகம் வெளியே பெரும் இயக்கத்தில் இருக்கிறது என்று நினைத்தாள். இங்கேயோ அபார மௌனம். இறுக்கம். மூட்டம். சுவர்க் கடிகாரம் இல்லை வீட்டில். அந்த டிக் டிக் சத்தம் கூட இல்லை. மின் விசிறி இருக்கிறது. மின்சாரம் இல்லை. அவள் போய் சிம்னி விளக்கு ஒன்றை சமையல் மேடையில் ஏற்றி வைத்தாள். முழு இருட்டு முதலையாய் அவளைக் கவ்வுவது என்னவோ போலிருந்தது.
அவள் அத்தனை தைரியசாலி அல்ல. இருட்டு அவளை பயமுறுத்தியது. இருட்டு என்று கூட இல்லை. எதையும் பேசவும், செய்யவும் துவங்குமுன்னம் அவளுக்கு சிறு பயமும் பதற்றமும் கூடவே வந்தது. இந்த இருட்டில் அவன் கூட இருக்கிறது கூட, அவன் பேசாவிட்டாலும், ஆறுதலாய் இருந்தது. இப்படியே கால காலத்துக்கும் அமர்ந்திருப்பதா? தன் தலை வீங்கி வெடித்துவிடும் போலிருந்தது. மனசின் அலையடிப்பில் வார்த்தைகள் கால காலமாய் குப்பைசேர்ந்தாப் போல அடைந்து கிடந்தன. சொற்களின் முடை நாற்றம் தாள முடியாதிருந்தது. தனக்கே நாறும்படியான சகிக்கவொண்ணா நிலை அது. சொற்களின் பிணம் தொண்டைக்குள் வாந்திவரச் செய்துவிடுமோ என்று பயந்தான்.
எனினும் வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளியேறவிடாமல் அவன் கவனமாய் இருந்தான். எதும் சமைத்திருக்கிறாளா தெரியவில்லை. சாப்பிட்டால் பேசாமல் படுத்துவிடலாம் என்று இருந்தது. தூங்குகிறோமோ இல்லையோ, படுத்து விடலாம். தூங்குகிற பாவனை அவனுக்குப் புதிது அல்ல. அவளுக்கும். அவள் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளக் கூட அவன் வாய்ப்பு அளிக்க மறுத்தான். நீ என் வாழ்வின் அதிதம். அதை அவள் புரிந்து கொள்ள வேண்டும். தான் அவளை விரும்பவில்லை... என்பதை தன் அலட்சியம் அவளுக்கு உணர்த்த வேண்டும் என அவன் நம்பினான்.
சட்டென்று காலை இழுத்துக் கொண்டாள் அவள். பதறினாப் போல ஸ்டூலில் இருந்து எழுந்து கொண்டாள். அவளிடமான திடீர் மாற்றம், அவன் திரும்பிப் பார்த்தான். தரையில் எதோ ஊர்ந்தாப் போலிருந்தது. புடவையைப் பதறி உதறினாள் அவள். சமையல் அறையில் ஏற்றியிருந்த விளக்கை. அவளே போய் எடுத்து வந்தாள். தரையில் துழாவினாப் போல தேடினாள். தேள். தேள் ஒன்று ஒன்று மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அவனும் எழுந்து வந்து தேளைப் பார்த்தான். பதற்றமாய் ஓட அது முயற்சிக்கவில்லை. பெரிய தேளாய் இருந்தது. அவன் பார்த்தான். குனிந்து தேள்ப் பக்கமாய் வெளிச்சம் காட்டினாள் அவள். தன் மேல் தேள் விழுந்து கடந்திருக்கிறது.
அவளுக்கு ஏனோ அப்போது பயமாய் இல்லை. கூட அவன் இருப்பதால் இருக்கலாம். ஆச்சர்யகரமாக அதன் முதுகெங்கும் சிறு சிறு தேள்குட்டிகள் நமநமவென்று திரிவதை அவன் கண்டான். விளக்குமாறு மாதிரி எதையாவது எடுத்து வந்து தேளை அடித்துவிட அவன் நினைத்தான். அவள் சமையல் அறைக்கு உள்ளே போனாள். பெண் தேள், குட்டிகள் ஈன்ற நிலையில் அவற்றை முதுகில் கதகதப்புக்காக ஏந்தித் திரியும் என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். அவள் ஒரு சிறு குப்பியில் இருந்த மண்ணெண்ணெயை தேளின் மேல் ஊற்றினாள். சில நிமடங்களில் தேள் சுருண்டு அழுக்குச் சுருணையாய்ப் போனது. அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
தனது நிதானம் அவளுக்கே வியப்பாகத்தான் இருந்தது. குனிந்து விளக்குமாற்றால் ஒரு காகிதத்தில் அதை அவள் அள்ளினாள். வெளியே இன்னும் மழை பெய்து பெருக்கியபடி இருந்தது. கதவைத் திறந்ததும் மழை ஓலம் இன்னும் உரத்துக் கேட்டது. புது நபர் நுழைய ஒப்பாரி அதிகரிப்பதைப் போல. அப்படியே காகிதத்தோடு வெளியே எறிந்தாள் அவள். அதற்குள் காற்றலைப்பில் மழை அவள்மேல் பாம்புச் சீறல் சீறி நனைத்தது. கதவைச் சாத்திவிட்டு அவள் திரும்பினாள். துண்டுடன் நின்று கொண்டிருந்தான் அவன்.“ஓனர் வந்திருந்தாரு...” என்றபடியே வாங்கிக் கொண்டாள்.
சிகரெட்! அமெரிக்காவின் போஸ்டனைச் சேர்ந்த நிறுவனம், 32 மீட்டர் நீளமான மரிஜூவானா சிகரெட்டை 40 தன்னார்வலர்களின் உதவியுடன் தயாரித்து வொர்செஸ்டரிலுள்ள டிசியு சென்டரில் நடந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இப்போது இது கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்படவிருக்கிறது.
எஸ்கேப்! சீனாவின் சோங்க்விங் நகரிலுள்ள அபார்ட்மெண்ட்டில் தீ. ஃபயர் சர்வீஸ் ஆட்கள் வந்து தீயை அணைக்கும்போதுதான் ஜன்னல் வழியாக ஒருவர் தீயிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதைக் கவனித்தார்கள். அருகிலிருந்த கண்ணாடியை உடைத்து தப்ப முயன்றவரை வீரர்கள் காப்பாற்றிய இந்த வீடியோ, உலகெங்கும் எமோஷனல் ஹிட் அடித்துள்ளது.
கேமராவைத் திருடிய பறவை! நார்வே புகைப்படக்காரர் ஜெல் ராபர்ட்ஸன் கடற்பறவைகளை போட்டோ எடுக்க, சில உணவுகளை அவைகளுக்கு கொடுத்தார். அதில் ஒரு பறவை அவரது உணவை சாப்பிட்டுவிட்டு, ட்ரோன் கேமராவையும் அபேஸ் செய்து பறந்துவிட்டது. ஐந்து மாதங்களுக்கு பிறகு கண்டுபிடித்த கேமராவிலிருந்த பதிவுகளுக்கு கோபுரோ விருது ராபர்ட்ஸனுக்கு கிடைத்துள்ளது.
சேலை! பிரான்சின் காட்ரி நகரில் ரெடியாகியுள்ள கல்யாணப் புடவை மக்களுக்கு செம சர்ப்ரைஸ் ஷாக். 8,095 மீட்டர் நீளத்திலுள்ள இப்புடவையின் மூலம் எவரெஸ்ட் மலையையே மூடிவிடலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! சாரிட்டி நிகழ்வுக்காக உருவான சேலையை இரண்டு மாதங்களில், 15 நபர்கள் உருவாக்கியுள்ளனர்.
|