கவிதை வனம்
அகதிகள் ஒரு ஆக்கிரமிப்பில் அல்லது ஒரு விரிவாக்கத்தில் அல்லது ஒரு தேவையின் பொருட்டு என இரக்கமற்று வெட்டி வீழ்த்தப்படும் மரங்களில் குடியிருந்த பறவைகள் வேறு வசிப்பிடம் நாடிப் புலம்பெயர்ந்து கிடைத்த கிளையில் கூடுகட்டி வாழத் துவங்குகையில் ஒருபோதும் அவை அழைக்கப்படுவதில்லை அகதிகளென்று.
- பாப்பனப்பட்டு வ.முருகன்

குறுங்கவிதைகள் அழகிய கையெழுத்து ரசிக்க முடியவில்லை தற்கொலைக் கடிதம்.
- நா.கி.பிரசாத்
தூரத்தில் தொடர்வண்டி தண்டவாளத்தில் ஊரும் மரவட்டை.
- கு.வைரசந்திரன்
|