கின்னஸ் போலீஸ்!ஆல் இன் ஆல் உலகமே கின்னஸ் சாதனை லிஸ்ட்டில் பேர் சேர்க்க துடிக்கும்போது அதை போலீஸ் செய்வதில் என்ன தப்பிருக்கிறது? சுவரில் கால் வைத்து உடலை எத்தி ஆகாயமார்க்கமாக ஏறிய உடலை குர்குரே சிப்ஸ் போல கோணலாக்கி பூமியில் லேண்டாகிறார் தினேஷ். யெஸ். கட்டிடங்களை ஜம்பிங், ரன்னிங் செய்து ஜாக்கிசானின் பார்கூர் டெக்னிக்கில் கில்லி தினேஷ்.

நேபாளத்தின் காத்மாண்டுவில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஸ்டண்ட்மேனும் போலீஸ்காரருமான தினேஷ், பார்கூர் டெக்னிக்கில் சுவரில் கால் வைத்து 360 டிகிரியில் பின்புறமாக 18 முறை பாடியை சுழற்றி பூமியில் நின்று கின்னஸ் சாதனை செய்திருக்கிறார். 15 வயதிலிருந்து பார்கூர் பயிற்சி எடுக்கும் தினேஷ், பல்வேறு நேபாளி படங்களிலும் ஸ்டண்ட்மேனாக டேலன்ட் காட்டியுள்ளாராம். நேபாளத்தின் பார்கூர் அசோசியேஷன் தலைவரும் தினேஷ்தான்!

- ரோனி