இந்தியாவின் நக மனிதன்!



மனிதர்கள் தங்கள் வயிற்றையும் சிறிய சைஸ் பேங்க் போல பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். பல்ப், கத்தி என காரேஜில் இருக்கும் அத்தனை பொருட்களையும் வயிற்றில் டாக்டர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த லிஸ்ட்டில் புதிதாக நகமும் சேர்ந்திருக்கிறது. கொல்கத்தாவின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாரக்னாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளி அட்மிட் ஆனார்.

ஸிஸோபெரெனியா பாதிப்பு கொண்டவரின் உடலை சோதித்தபோது, வயிற்றில் ஒரு கிலோவுக்கு ஏதோ ஒரு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆபரேஷனில் வயிற்றிலிருந்து 2.5 இன்ச் நீளம் கொண்ட 639 நகங்களை அகற்றியிருக்கிறார்கள். ‘மனநல பாதிப்பு கொண்ட நோயாளி மண்ணையும், நகங்களையும் சேர்த்து விழுங்கியதால் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஆபரேஷனில் அதை நீக்கி விட்டோம்...’ என ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார் டாக்டர் சித்தார்த்தா பிஸ்வாஸ்.