எக்சைட்மென்ட்!
சந்தானம் - விவேக் காம்போவில் ‘சக்கப்போடு போடுராஜா’ செம எக்சைட்மென்ட் ட்ரீட். - த.சத்தியநாராயணன், அயன்புரம்; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; நடராஜன், சென்னை.
பறவைகள் குறித்த அட்டகாச தகவல்களோடு ஆசம் போட்டோக்கள், ஒன்ஸ்மோர் வாசிக்க வைத்தன. - ஜானகி ரங்கநாதன், சென்னை; பூதலிங்கம், நாகர்கோவில்; நவாப், திருச்சி; ஜோசப், சென்னை; சங்கரநாராயணன், திருநெல்வேலி; லட்சுமிநாராயணன், வடலூர்.
‘நிராகரிப்பு’ கவிதை ஏழ்மையின் எளிய சித்திரம். - சைமன்தேவா, விநாயகபுரம்.
வா.மு.கோமுவின் ‘தேவிசித்ரா சொன்ன பதில்’ கதையல்ல, நிஜம் என்று சொல்லவைத்தது. - ஜானகி ரங்கநாதன், சென்னை.
 Firewomenகளைப் பற்றிய செய்தி, லேட்டஸ்ட் & ஹாட்டஸ்ட். - சத்தியநாராயணன், சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; பூதலிங்கம், நாகர்கோவில்; மனோகர், கோவை; ப்ரீத்தி, செங்கல்பட்டு.
‘அருவி’ படத்தைப்பற்றி டைரக்டர் அருண் கூறியது அருவிச்சாரலில் நனையத்தூண்டியது. - சத்தியநாராயணன், சென்னை.
வாலிக்கு பிச்சமூர்த்தி சொன்ன வார்த்தை பலித்தாலும், பிச்சமூர்த்திக்கு தமிழ் சோறுபோடவில்லை என்பது புரியாத புதிர். - மனோகர், கோவை.
கலைநயம் பொங்கும் கலாக்ஷேத்ரா பொக்கிஷ பேரானந்தம். - சங்கீதசரவணன், மயிலாடுதுறை; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; கோவிந்தராஜ், குடியாத்தம்; கைவல்லியம், மானகிரி; மயிலை கோபி, அசோக்நகர்; ராமகண்ணன், திருநெல்வேலி; லட்சுமிநாராயணன், வடலூர்; வண்ணை கணேசன், சென்னை; பூதலிங்கம், நாகர்கோவில்; ஜனனி, திருவண்ணாமலை.
பள்ளிமாணவர்களுக்கு சினிமாவை அறிமுகப்படுத்தும் ராமதாஸ் பாராட்டுக்குரியவர். - ஆனி அஞ்சலின், சென்னை.
கணினித்தமிழர் சிவகுமாரின் தமிழ்ப்பற்றை அறிந்ததும் உள்ளம் சிலிர்த்தது. - ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகர்.
‘பக்கா’ படத்தின் செய்தி செம கிக்காய் லைக்ஸ் போடவைத்தது. - வண்ணை கணேசன், சென்னை; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
காஃபி டேபிளில் சிறார் திருமணம் பற்றிய தகவல்கள் ஹைலைட் விழிப்புணர்வு தந்தன. - அக்ஷயா மாறன், திருவண்ணாமலை.
‘மெர்சல்’ விமர்சனம் நச்சென அசத்தல்ங்ண்ணா! - த.சத்தியநாராயணன், சென்னை.
குழந்தைகளுக்கு கல்வி யளித்த சோட்டிகுமாரிக்கு வாழ்த்துக்கள். கண்ணுக்குள் ஷேவிங், ஆச்சரியசெய்தி. ஸ்கூட்டர் திருமணம், படு சுவாரசியம். ஆதார் படுகொலை, மனதை வேதனைப்படுத்தியது. - வளையாபதி, தோட்டக்குறிச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மனோகர், கோவை; சேவுகப்பெருமாள், பெருமகளூர்; சைமன்தேவா, விநாயகபுரம்.
- ரீடர்ஸ் வாய்ஸ்
|